கருப்பு உளுந்து இருந்தா.. இட்லி, தோசைக்கு இந்த ஸ்டைலில் சட்னி செய்யுங்க.. ருசியானதும் சத்தானதும் கூட...

Posted By:

Karuppu Ulunthu Chutney recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் பெரும்பாலும் டிபனாக இருக்குமா? அப்படி செய்யும் டிபனுக்கு எப்போதும் சட்னி, சாம்பார் தான் சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் சைடு டிஷ் செய்து போரடித்து விட்டதா? அப்படியானால் வீட்டில் கருப்பு உளுந்து இருந்தால், அவற்றைக் கொண்டு அட்டகாசமான சுவையில் சட்னி செய்யுங்கள். இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதம், சப்பாத்தியுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

Karuppu Ulunthu Chutney How To Make Black Urad Dal Chutney

உங்களுக்கு இந்த கருப்பு உளுந்து சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கருப்பு உளுந்து சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கருப்பு உளுத்தம் பருப்பு - 50 கிராம்
* வரமிளகாய் - 5
* புளி - 1 துண்டு
* பூண்டு - 5 பல்
* கறிவேப்பிலை - 2 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கருப்பு உளுத்தம் பருப்பை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் வரமிளகாய், புளி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை நறுக்கி சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, நன்கு அரைத்துக் கொள்ள வேண்ம்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு, ஜாரில் சிறிது நீரை ஊற்றி அலசி, சட்னியுடன் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக சட்னியை தாளிப்பதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கலந்தாஙல, கருப்பு உளுந்து சட்னி தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 25, 2026, 6:30 [IST]
Desktop Bottom Promotion