மணமணக்கும்.. நாட்டுக்கோழி ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..

Posted By:

Naatu Kozhi Fry Recipe In Tamil: உங்கள் வீட்டில் நாட்டுக்கோழியை அடிக்கடி வாங்குவீர்களா? அப்படி நாட்டுக்கோழி வாங்கினால் எப்போதும் குழம்பு மட்டும் தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை நாட்டுக்கோழி வாங்கினால் அதைக் கொண்டு ப்ரை செய்யுங்கள். இந்த ப்ரை செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சுவையாகவும் இருக்கும். மேலும் இந்த வறுவலை சற்று கிரேவியாக செய்தால், சாதத்துடன் சேர்த்து பிரட்டி சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதுவே ட்ரையாக செய்தால், ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.

Naatu Kozhi Fry How To Make Simple amp amp Tasty Country Chicken Fry

உங்களுக்கு இந்த நாட்டுக்கோழி ப்ரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நாட்டுக்கோழி ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* நாட்டுக்கோழி - 3/4 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

வறுத்து பொடி செய்வதற்கு...

* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3
* மிளகு - 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 1

தாளிப்பதற்கு...

* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வேக வைத்த சிக்கன்
* அரைத்த மசாலா பொடி
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் நாட்டுக்கோழியை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நாட்டுக்கோழியை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் சிக்கன் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து நன்கு கிளறி விட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, வரமிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து, கறிவேப்பிலை தூவி நன்கு வதக்க நிறம் மாற வதக்க வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்த சிக்கனை நீருடன் அப்படியே சேர்த்து கிளறி, அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, நீர் வற்றும் வரை மிதமான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* சிக்கனில் உள்ள நீர் ஓரளவு வற்றியதும், அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால் சுவையான நாட்டுக்கோழி ப்ரை தயார்.

[ of 5 - Users]
Story first published: Wednesday, November 25, 2026, 15:11 [IST]
Desktop Bottom Promotion