Latest Updates
-
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்கள் முதலாளியாக ஜெயிக்கப் பிறந்தவர்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் முன்னாள் காதலன்/காதலியை கனவில் பார்க்கிறார்களா? கனவு சாஸ்திரத்தின் படி அதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
ஆண்கள் பெண்களின் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தலாமா? விளக்கும் சரும நிபுணர்! -
December Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது அதனுடன் 3 ஐஸ்கட்டிகளை சேர்த்து துவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
மணமணக்கும்.. நாட்டுக்கோழி ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
தமிழ்நாட்டிலேயே மிகவும் பழமையான நகரம் எது தெரியுமா? எதுனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
20-30 வயதிலேயே முழங்கால் வலி ஏன் ஏற்படுகிறது? அதை தடுப்பது எப்படி? விளக்கும் டாக்டர்! -
உருளைக்கிழங்கு பட்டர் மசாலா ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 6 ராசிக்கு தொழில் ரீதியாக பொற்காலமாக இருக்கும்..
கமகமக்கும் முள்ளங்கி சுண்டல் கார குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Mullangi Sundai Puli Kuzhambu Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் சாம்பார் அல்லது புளிகுழம்புதான் தினமும் மதியம் பிரதான குழம்பாக இருக்கும். ஒரே மாதிரியான புளிக்குழம்பு, சாம்பார் செய்வது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி சமைப்பவர்களுக்கும் நாளடைவில் போரடித்து விடும். அப்படியானால் ஒரு நாள் இந்த வித்தியாசமான புளிக்குழம்பை முயற்சி செய்து பாருங்கள். இந்த புளிக்குழம்பின் தனித்துவமே இது முள்ளங்கி சேர்த்து செய்யப்படுவதுதான்.

முள்ளங்கியை வைத்து பொதுவாக சாம்பார்தான் செய்வோம், ஆனால் அதை வைத்து ஒரு அட்டகாசமான புளிக்குழம்பை செய்யலாம். மேலும் இதில் கருப்பு சுண்டல் சேர்த்து செய்யப்படுவதால் இது சுவையானது மட்டுமின்றி மிகவும் ஆரோக்கியமானதும் கூட. இந்த குழம்புக்கென்று ஒரு தனித்துவமான மசாலா அரைக்க வேண்டும், அதுதான் இந்த குழம்பின் சுவையை மேலும் அதிகரிக்கிறது.
உங்களுக்கு முள்ளங்கி சுண்டல் புளிக்குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முள்ளங்கி சுண்டல் புளிக்குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கருப்பு கொண்டைக்கடலை - 1 கப்
- நறுக்கிய முள்ளங்கி - 1
- புளிக்கரைசல் - ½ கப்
- சின்ன வெங்காயம் - 5 [நறுக்கியது]
- பூண்டு - 5 பற்கள் [தட்டியது]
- கறிவேப்பிலை - 1 கொத்து
- கடுகு - 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - ½ ஸ்பூன்
- கடலைப் பருப்பு - ½ ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - ½ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
- வெல்லம் - ½ ஸ்பூன் [துருவியது]
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கடலை எண்ணெய் - 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைக்க வேண்டியவை:
- வெந்தயம் - அரை ஸ்பூன்
- வர மிளகாய் - 3
- துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்
- மல்லி விதைகள் - ½ ஸ்பூன்
- கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
- துவரம்பருப்பு - ½ ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
- தண்ணீர் - அரை கப்
செய்முறை:
- முதலில் வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் வாசனை வரும் வரை வறுக்கவும்.
- பின்னர் அவற்றை ஆற வைத்து ஒரு மிக்சி ஜாரில் அரை கப் தண்ணீர் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- கொண்டைக்கடலையைக் கழுவி, இரவு முழுவதும் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை வடித்துவிட்டு, குக்கரில் வைத்து 4 முதல் 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, கடுகு சேர்த்துப் பொரியவிடவும்.
- அதன்பின் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும்.
- பருப்பு நிறம் மாறியதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, அது லேசான பழுப்பு நிறமாகும் வரை வதக்கவும்.
- அதன்பின் பூண்டு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் பெருங்காயம் சேர்த்து வதக்கவும்.
- இப்போது நறுக்கிய முள்ளங்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு தண்ணீர் ஊற்றி, முள்ளங்கி மென்மையாகும் வரை வேகவைக்கவும்.
- முள்ளங்கி வெந்ததும் வேகவைத்த கொண்டைக்கடலையைச் சேர்த்து வதக்கவும்.
- புளிக்கரைசலைச் சேர்த்து நன்கு கலந்து, கொதித்து கெட்டியாகும் வரை விடவும்.
- அதன்பின் அரைத்த விழுது, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொதிக்கவிடவும்.
- இறுதியாக வெல்லத்தைச் சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்.
- பிறகு அடுப்பை அணைத்துவிடவும். அவ்வளவுதான் மணமணக்கும் முள்ளங்கி புளிக்குழம்பு ரெடி!



Click it and Unblock the Notifications
