Latest Updates
-
திரிகிரக யோகம் சிம்ம ராசியில் உருவாவதால் வெற்றிகளையும், பணத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உடல் எடையை குறைப்போருக்கான ஓட்ஸ் உப்புமா - இந்த பக்குவத்துல ஒருடைம் செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
ஃபெங் சூயி படி மூங்கில் செடியை வீட்டின் இந்த இடத்தில் வாங்கி வையுங்க.. வீட்டில் செல்வம் பெருகும்! -
கமகமக்கும் முள்ளங்கி சுண்டல் கார குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்கள் முதலாளியாக ஜெயிக்கப் பிறந்தவர்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் முன்னாள் காதலன்/காதலியை கனவில் பார்க்கிறார்களா? கனவு சாஸ்திரத்தின் படி அதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
ஆண்கள் பெண்களின் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தலாமா? விளக்கும் சரும நிபுணர்! -
December Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது அதனுடன் 3 ஐஸ்கட்டிகளை சேர்த்து துவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
மணமணக்கும்.. நாட்டுக்கோழி ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க..
18 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் கேது: 2028 வரை இந்த 3 ராசிக்காரங்கள யாராலும் அசைக்க முடியாது!
Ketu Transit In Cancer 2026: நவகிரகங்களில் நிழல் கிரகமாக கருதப்படுபவர் கேது. இந்த கேது எப்போதும் மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். மேலும் இவர் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். தற்போது கேது சூரிய பகவானின் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இவர் டிசம்பர் 05 ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளார்.

இந்த பெயர்ச்சியின் போது கேது மனதின் காரணியாக கருதப்படும் சந்திரனின் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். கேது இந்த கடக ராசிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் செல்லவுள்ளார். இதனால் இந்த கேது பெயர்ச்சியானது சில ராசிகளுக்கு மிகவும் சிறப்பானதாக அமையக்கூடும். குறிப்பாக இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து, வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படலாம்.
அதுமட்டுமின்றி கேதுவின் அருளால் நல்ல பெயரையும், புகழையும் பெற வாய்ப்புக்கள் உள்ளன. சொல்லப்போனால் அடுத்த 18 மாதங்கள் இந்த ராசிக்காரர்களை யாராலும் அசைக்க முடியாது. அந்த அளவில் வலிமையானவர்களாக வலம் வருவார்கள். இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் கடக ராசிக்கு செல்லும் கேதுவால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 7 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும். முக்கியமாக திடீர் நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதன் மூலம் உங்களில் நிதி நிலைமை வலுவடையும். வாழ்வில் சில புதிய நபர்களை சந்திப்பீர்கள். இந்த புதிய நட்பால் புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் உருவாகலாம் அல்லது அந்த புதிய நட்பின் மூலம் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
கடகம்
கடக ராசியின் முதல் வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிப்பதோடு, ஒவ்வொரு வேலையிலும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்களின் செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மேலும் பணியிடத்தில் உங்களின் அடையாளத்தை உருவாக்குவீர்கள். படித்து முடித்த மாணவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரலாம். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு கேது செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பல புதிய நபர்களை வாழ்வில் சந்திப்பீர்கள். இந்த நபர்களின் நட்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



