Latest Updates
-
கமகமக்கும் முள்ளங்கி சுண்டல் கார குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்கள் முதலாளியாக ஜெயிக்கப் பிறந்தவர்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் முன்னாள் காதலன்/காதலியை கனவில் பார்க்கிறார்களா? கனவு சாஸ்திரத்தின் படி அதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
ஆண்கள் பெண்களின் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தலாமா? விளக்கும் சரும நிபுணர்! -
December Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
வாஷிங் மிஷினில் துணி துவைக்கும் போது அதனுடன் 3 ஐஸ்கட்டிகளை சேர்த்து துவைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? -
மணமணக்கும்.. நாட்டுக்கோழி ப்ரை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
தமிழ்நாட்டிலேயே மிகவும் பழமையான நகரம் எது தெரியுமா? எதுனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
20-30 வயதிலேயே முழங்கால் வலி ஏன் ஏற்படுகிறது? அதை தடுப்பது எப்படி? விளக்கும் டாக்டர்! -
உருளைக்கிழங்கு பட்டர் மசாலா ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும்
ஃபெங் சூயி படி மூங்கில் செடியை வீட்டின் இந்த இடத்தில் வாங்கி வையுங்க.. வீட்டில் செல்வம் பெருகும்!
Feng Shui Bamboo Plant: ஃபெங் சூயி என்பது வாஸ்து சாஸ்திரத்தைப் போன்றது. இது சீனாவில் பின்பற்றப்படும் ஒரு பழங்கால முறையாகும். இந்த ஃபெங் சூயி சாஸ்திரத்தில் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும், செல்வ செழிப்பிற்காகவும் வைத்திருக்க வேண்டிய சில பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் மூங்கில் செடி. பசுமையான மூங்கில் செடியானது மகிழ்ச்சி, செழிப்பு, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறை ஆற்றலின் சின்னமாக கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டில் வைத்திருப்பதன் மூலம் அது எதிர்மறை ஆற்றலை நீக்கி செழிப்பை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது.

ஆயினும் இந்த மூங்கில் செடியை சரியான இடத்திலும், திசையிலும் வைக்க வேண்டியது முக்கியம். தவறான திசையில் வைக்கும் போது, அது நேர்மறையான பலன்களை தருவதற்கு பதிலாக எதிர்மறையான பலன்களைத் தரும். ஆகவே வீட்டில் செல்வமும், சந்தோஷமும் பெருக வேண்டுமானால், ஃபெங் சூயி சாஸ்திரத்தின் படி மூங்கில் செடியை வீட்டில் வைப்பதற்கான விதிகளையும், திசைகளையும், இடங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். கீழே இதுக்குறித்து விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த திசையில் மற்றும் எந்த இடத்தில் மூங்கில் செடியை வைக்க வேண்டும்?
மூங்கில் செடியை வீட்டில் வைக்க சிறந்த திசை என்றால் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசை ஆகும். இந்த திசையில் வைக்கும் போது, அது ஆரோக்கியம், செழிப்பு மற்றும் அமைதியைக் கொண்டு வரும். மேலும் மூங்கில் செடியை குபேர திசையான வடக்கு திசையிலும் வைக்கலாம். இப்படி வைப்பதன் மூலம் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். இது தவிர வீட்டின் ஹாலில் வைக்கும் போது, குடும்ப உறுப்பினர்களிடையேயான அன்பும், பிணைப்பும் மேம்படும் மற்றும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குறையும்.
எந்த இடத்தில் மூங்கில் செடியை வைக்கக்கூடாது?
மூங்கில் செடியை வீட்டில் சரியான இடத்தில் வைக்கும் போது தான் அதன் முழு பலனைப் பெற முடியும். தவறான இடத்தில் வைக்கும் போது அது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். அந்த வகையில் மூங்கில் செடியை குளியலறை அல்லது கழிவறைக்கு அருகில் வைக்கக்கூடாது. அதேப் போல் சமையலறையிலும் வைக்கக்கூடாது.
முக்கியமாக மூங்கில் செடியை அசுத்தமான இடங்களில் வைக்கவே கூடாது. இப்படி வைப்பதனால், அது அசுப பலன்களைத் தரும். எனவே வீட்டில் சந்தோஷம், செல்வம், நேர்மறை ஆற்றல் போன்றவை அதிகரிக்க, மூங்கில் செடியை வெளிச்சம் நிறைந்த மற்றும் சுத்தமான இடத்தில் வைத்து வளர்த்து வாருங்கள்.
மூங்கில் செடியை வீட்டில் வைப்பதனால் கிடைக்கும் நன்மைகள்
மூங்கில் செடியை வீட்டில் வைப்பது நல்ல அதிர்ஷ்டத்தை தருவதோடு, பண வரவையும் அதிகரிக்கும். அதுவும் இந்த செடியை சரியான திசையிலும் இடத்திலும் வைப்பது, வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தைப் பராமரித்து, குடும்ப உறுப்பினர்களுக்கு முன்னேற்றத்தையும் செழிப்பையும் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி இந்த செடியானது வீட்டில் செய்யப்படும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த உதவுவதாகவும் கூறப்படுகிறது. எனவே நீட்டில் பணப்பிரச்சனையை அதிகம் சந்திப்பவர்கள் இந்த செடியை வாங்கி வீட்டில் வைக்க நிதி சிக்கல்கள் தணிந்து, பண வரவு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
