Latest Updates
-
தேங்காய் தோசையும், முருங்கைக்கீரை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 26, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க குடும்பத்தில் புயலடிக்கப் போகுதாம் -
18 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் கேது: 2028 வரை இந்த 3 ராசிக்காரங்கள யாராலும் அசைக்க முடியாது! -
திரிகிரக யோகம் சிம்ம ராசியில் உருவாவதால் வெற்றிகளையும், பணத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உடல் எடையை குறைப்போருக்கான ஓட்ஸ் உப்புமா - இந்த பக்குவத்துல ஒருடைம் செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
ஃபெங் சூயி படி மூங்கில் செடியை வீட்டின் இந்த இடத்தில் வாங்கி வையுங்க.. வீட்டில் செல்வம் பெருகும்! -
கமகமக்கும் முள்ளங்கி சுண்டல் கார குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்கள் முதலாளியாக ஜெயிக்கப் பிறந்தவர்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் முன்னாள் காதலன்/காதலியை கனவில் பார்க்கிறார்களா? கனவு சாஸ்திரத்தின் படி அதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
ஆண்கள் பெண்களின் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தலாமா? விளக்கும் சரும நிபுணர்!
டிசம்பர் மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
December Matha Rasi Palan 2026: நாம் தற்போது 2026 ஆம் ஆண்டின் இறுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சில நாட்களில் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த டிசம்பர் மாதமானது ஜோதிட ரீதியாக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த மாதத்தில் 4 முக்கிய கிரகங்களின் நிலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படவுள்ளன.
அதில் மாதத்தின் தொடக்கத்திலேயே நிழல் கிரகங்களான ராகுவும், கேதுவும் ராசியை மாற்றும். அதைத் தொடர்ந்து சனி பகவான் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். அதன் பின் குரு பகவான் சிம்ம ராசியில் வக்ர நிலையில் பயணத்தை தொடங்கவுள்ளார். பின்பு சூரியன் தனுசு ராசிக்குள் நுழைவார்.

இப்படி மாதத்தின் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சில ராசிக்காரர்கள் தங்களின் தொழில் வாழ்க்கையில் அபரிமிதமான வளர்ச்சியையும், நிதி நன்மைகளையும் பெறவுள்ளனர். இப்போது டிசம்பர் மாதத்தில் தொழில் ரீதியாக அதிர்ஷ்டத்தைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். முக்கியமாக வேலையில் பெரிய அளவில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் இந்த மாதத்தில் வெற்றிகரமாக முடிவடையும். குறிப்பாக நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இந்த மாதத்தில் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உடன் வேலை செய்வோருடனான உறவு சிறப்பாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதமானது நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு வலுப்பெற வாய்ப்புள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகி நிதி நிலைமை வலுவடைய வாய்ப்புள்ளது. நீதிமன்ற வழக்குகள் நடந்து கொண்டிருந்தால், சாதகமான முடிவுகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். கடின உழைப்புக்கான பலன் இம்மாதத்தில் நிச்சயம் கிடைக்கும். குறிப்பாக முடிக்க முடியாமல் நிலுவையில் உள்ள வேலைகள் எவ்வித தடையும் இல்லாமல் வெற்றிகரமாக முடிவடையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சி ஏற்படும். பணப் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது படிப்படியாக குறையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. வீட்டு சூழல் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். குடும்பத்தினருக்கு அளித்த வாக்குறுதியை இந்த மாதத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். ஏற்கனவே உள்ள கருத்து வேறுபாடு பிரச்சனைகளானது தீர்க்கப்படலாம். முக்கியமாக இம்மாதத்தில் உங்களின் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

