Latest Updates
-
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - இப்படி செய்யுங்க.. நாக்குல அரிப்பே ஏற்படாது! -
இரத்த சர்க்கரை குறையணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 10 காய்கறிகளை சாப்பிடுங்க.. -
டிசம்பர் மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
தேங்காய் தோசையும், முருங்கைக்கீரை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 26, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க குடும்பத்தில் புயலடிக்கப் போகுதாம் -
18 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் கேது: 2028 வரை இந்த 3 ராசிக்காரங்கள யாராலும் அசைக்க முடியாது! -
திரிகிரக யோகம் சிம்ம ராசியில் உருவாவதால் வெற்றிகளையும், பணத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உடல் எடையை குறைப்போருக்கான ஓட்ஸ் உப்புமா - இந்த பக்குவத்துல ஒருடைம் செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
ஃபெங் சூயி படி மூங்கில் செடியை வீட்டின் இந்த இடத்தில் வாங்கி வையுங்க.. வீட்டில் செல்வம் பெருகும்! -
கமகமக்கும் முள்ளங்கி சுண்டல் கார குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
எலுமிச்சை தோலை இனி குப்பையில் போடாதீங்க... இந்த 5 விஷயங்களுக்கு பயன்படுத்துங்க!
Lemon Peels Hacks: எலுமிச்சை பழத்தை நாம் பொதுவாக சமையலுக்கும், ஜூஸ் தயாரிக்கவும், சருமப் பராமரிப்புக்கும் பயன்படுத்துகிறோம். ஆனால் எலுமிச்சையின் சாற்றினை பிழிந்துவிட்டு தோலை தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் இனிமேல் அந்த தோலை தூக்கி எறியாதீர்கள். ஏனெனில் அந்த தோலிலும் பல நன்மைகள் உள்ளன என்பது தெரியுமா? முக்கியமாக வீட்டை சுத்தம் செய்ய, வீட்டை நறுமணமாக, புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள என பலவாறு எலுமிச்சையின் தோல் உதவி புரிகிறது.

எலுமிச்சையின் தோலில் சிட்ரிக் அமிலம், இயற்கை எண்ணெய்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்றவை நிறைந்துள்ளன. அதுவும் எலுமிச்சை தோலில் இயற்கையான நறுமணமும், சுத்தம் செய்ய உதவும் தன்மைகளும் இருப்பதால், அன்றாட வீட்டு வேலைகளில் இதனைப் பயன்படுத்த முடியும்.
கெமிக்கல் நிறைந்த கிளீனர்களை அடிக்கடி பயன்படுத்த விரும்பாதவர்கள், சில எளிய வழிகளில் எலுமிச்சை தோலைப் பயன்படுத்திப் பார்க்கலாம். இப்போது வீட்டை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க எலுமிச்சையின் தோலை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.
1. கிச்சன் க்ளீனர்
முதலாவதாக எலுமிச்சையின் தோலைக் கொண்டு சக்திவாய்ந்த கிச்சன் க்ளீனரை தயாரிக்கலாம். அதற்கு எலுமிச்சையின் தோலை எடுத்துக் கொண்டு, அதை கண்ணாடி ஜாரில் போட்டு, அத்துடன் வெள்ளை வினிகரை ஊற்றி மூடி வைத்து 7-10 நாட்கள் ஊற வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றினால், சூப்பரான கிச்சன் க்ளீனர் தயார். இந்த க்ளீனரைக் கொண்டு எண்ணெய் பசைமிக்க சமையலறை திட்டுக்கள், கேஸ் ஸ்டவ் போன்றவற்றை எளிதில் சுத்தம் செய்யலாம். இதனால் எண்ணெய் பசை எளிதில் நீங்குவதோடு, நறுமணமிக்கதாகவும் இருக்கும். முக்கியமாக இந்த க்ளீனரைக் கொண்டு ஃப்ரிட்ஜ், டைல்ஸ் போன்றவற்றையும் சுத்தம் செய்யலாம்.
2. ஃப்ரிட்ஜ் அல்லது குப்பைத் தொட்டியின் துர்நாற்றம் நீங்க..
மீந்து போன உணவுகளை வைத்து உங்கள் ஃப்ரிட்ஜ் துர்நாற்றம் வீசுகிறதா? அல்லது உங்களின் குப்பைத்தொட்டியில் துர்நாற்றம் அதிகம் வீசுகிறதா? அப்படியானால் எலுமிச்சையின் தோலை ஃப்ரிட்ஜ்ஜில் உள்ளே வையுங்கள் அல்லது குப்பைத் தொட்டிக்கு அருகில் வையுங்கள். இதனால் எலுமிச்சையின் தோல் துர்நாற்றத்தை ஈர்த்து, நல்ல மணத்தை தரும். ஒருவேளை குப்பைத் தொட்டில் துர்நாற்றம் மிக அதிகமாக வீசினால், எலுமிச்சையின் தோலில் சிறிது பேக்கிங் சோடாவை தூவி உள்ளே வைத்து, இரவு முழுவதும் விடுங்கள். மறுநாள் காலையில் குப்பைத் தொட்டியை திறந்தால் நல்ல மணம் வீசும்.
3. பாத்திரங்கள் புத்தம் புதிது போன்று ஜொலிக்க..
உங்கள் வீட்டில் உள்ள வாணலி, குக்கர் போன்றவை பொலிவிழந்து உள்ளதா? அப்படியானால் அவற்றை பொலிவாக்க எலுமிச்சை தோல் பெரிதும் உதவி புரியும். அதற்கு எலுமிச்சையின் தோலை நேரடியாக பாத்திரங்களில் தேய்த்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவி, துணியால் துடைக்க வேண்டும். இதனால் எலுமிச்சையின் உள்ள சிட்ரிக் அமிலம் பாத்திரங்களில் உள்ள கருமையைப் போக்கி, புதிது போன்று ஜொலிக்க வைக்கும்.
4. நேச்சுரல் ஏர் பிரஷ்னர்
உங்கள் வீட்டில் அறைகள் நல்ல மணத்துடன் இருக்க ரூம் ஸ்ப்ரே பயன்படுத்துவீர்களா? அப்படியானால் இனிமேல் நிறைய பணம் செலவழித்து ரூம் ஸ்ப்ரே வாங்கி பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எலுமிச்சையின் தோல் இருந்தாலே போதும், வீட்டை நல்ல மணத்துடன் வைத்துக் கொள்ளலாம். அதற்கு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அத்துடன் எலுமிச்சையின் தோல், கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து குறைவான தீயில் வைத்து 10-15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், ரூம் ஸ்ப்ரே தயார். இந்த நேச்சுரல் ரூம் ஸ்ப்ரேயை வீட்டில் மீன் சமைக்கும் நாட்களில் பயன்படுத்தினால், வீடே கவுச்சு நாற்றம் இல்லாமல் இருக்கும்.
5. எறும்பு, பூச்சிகளை தடுக்க..
வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக உள்ளதா? அப்படியானால் எலுமிச்சையின் தோல் பெரிதும் உதவி புரியும். ஏனெனில் எறும்புகளுக்கு எலுமிச்சையின் வாசனை பிடிக்காது. எனவே எறும்புகள் வரும் இடங்களில் இந்த எலுமிச்சையின் தோலை தேய்த்துவிடுங்கள். இல்லாவிட்டால் எலுமிச்சையின் தோலை எறும்புகள் வரக்கூடிய இடங்களில் ஆங்காங்கு வைத்துவிடுங்கள். இது பாதுகாப்பானது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
