Latest Updates
-
டிசம்பர் மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
தேங்காய் தோசையும், முருங்கைக்கீரை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 26, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க குடும்பத்தில் புயலடிக்கப் போகுதாம் -
18 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் கேது: 2028 வரை இந்த 3 ராசிக்காரங்கள யாராலும் அசைக்க முடியாது! -
திரிகிரக யோகம் சிம்ம ராசியில் உருவாவதால் வெற்றிகளையும், பணத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உடல் எடையை குறைப்போருக்கான ஓட்ஸ் உப்புமா - இந்த பக்குவத்துல ஒருடைம் செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க.. -
ஃபெங் சூயி படி மூங்கில் செடியை வீட்டின் இந்த இடத்தில் வாங்கி வையுங்க.. வீட்டில் செல்வம் பெருகும்! -
கமகமக்கும் முள்ளங்கி சுண்டல் கார குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிகளில் பிறந்தவர்கள் முதலாளியாக ஜெயிக்கப் பிறந்தவர்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் முன்னாள் காதலன்/காதலியை கனவில் பார்க்கிறார்களா? கனவு சாஸ்திரத்தின் படி அதன் அர்த்தம் என்ன தெரியுமா?
இரத்த சர்க்கரை குறையணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 10 காய்கறிகளை சாப்பிடுங்க..
Best Vegetables For Diabetes In Tamil: உலகிலேயே இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம். சொல்லப்போனால் ஒவ்வொரு இந்திய வீடுகளிலுமே சர்க்கரை நோயாளிகள் இருக்கத் தான் செய்கின்றனர். சர்க்கரை நோய் என்றதுமே எந்த உணவை சாப்பிடக்கூடாது என்பது பற்றி தான் பலரும் பேசுவார்கள். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் நிறைய பேருக்கு எதை சாப்பிடலாம், எந்த அளவில் சாப்பிடலாம் என்பது குறித்து சரியாக தெரியாமல் உள்ளனர். முக்கியமாக தினசரி உணவில் சேர்க்கும் காய்கறிகளில் எந்த காய்கறி இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என தெரியவில்லை.

இத்தகையவர்களுக்காக டாக்டர் கார்த்திகேயன் அவர்கள் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு உதவும் 10 காய்கறிகள் குறித்து பகிர்ந்துள்ளார். அதுவும் அந்த காய்கறிகளை வாரத்திற்கு எத்தனை முறை சாப்பிடலாம், எப்படி சாப்பிடலாம், எவ்வளவு சாப்பிடலாம் என்பது குறித்து தெளிவாக விளக்கியுள்ளார். அது என்னென்ன காய்கறிகள் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
1. பாகற்காய்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறிகளில் ஒன்று தான் பாகற்காய். இதில் சரண்டின் (Charantin), பாலிபெப்டைடு-P (Polypeptide-P), விசின் (Vicine) போன்ற தாவரச் சேர்மங்கள் உள்ளன. அதுவும் இதில் உள்ள பாலிபெப்டைடு-P ஒரு தாவர இன்சுலின் என்றே கூறலாம். ஏனெனில் இது இன்சுலின் மாதிரியே குளுகோஸை செல்லுக்குள் அனுப்ப உதவக்கூடியது.
எப்படி சாப்பிடலாம்? பாகற்காயை பொரியலாக சாப்பிடலாம். அதுவும் வாரத்திற்கு 2-3 முறை சாப்பிடலாம். பாகற்காயின் கசப்பைக் குறைக்க நறுக்கிய துண்டுகளில் சிறிதளவு உப்பு தடவி 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் நன்றாகக் கழுவிச் சமைக்கலாம். ஆனால் பாகற்காயில் வெல்லத்தை சேர்ப்பதையோ, எண்ணெயில் பொரித்து சிப்ஸாக சாப்பிடுவதையோ தவிர்க்க வேண்டும்.
2. வெண்டைக்காய்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற இரண்டாவது சிறந்த காய்கறி வெண்டைக்காய். இந்த வெண்டைக்காயில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் மியூசிலேஜ் (Mucilage) எனப்படும் வழவழப்பான பொருள் உள்ளது. இது செரிமானத்தின் போது ஜெல் போன்ற தன்மையை உருவாக்கி, கார்போஹைட்ரேட் செரிமானம் மற்றும் குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதன் வேகத்தைப் பாதிக்கக்கூடும்.
எப்படிச் சாப்பிடலாம்? ஒரு கப் வெண்டைக்காய் பொரியலை வாரத்திற்கு மூன்று முறை சாப்பிடலாம். முக்கியமாக குறைந்த எண்ணெயைப் பயன்படுத்திச் சமைப்பது சிறந்தது. சமூக ஊடகங்களில் வெண்டைக்காயைத் தண்ணீரில் ஊறவைத்து அந்தத் தண்ணீரைக் குடிப்பது சர்க்கரையைக் குறைக்கும் என்ற கருத்து பிரபலமாக உள்ளது. ஆனால், இதற்கு போதுமான அறிவியல் ஆதாரங்கள் இல்லை. எனவே, வெண்டைக்காயை முழுமையாகச் சமைத்து சாப்பிட்டாலே நல்ல பலன் கிடைக்கும்.
3. கோவைக்காய்
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மூன்றாவது காய்கறி கோவைக்காய். இந்த கோவைக்காயின் சாறு கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இந்த சாறு வெறும் வயிற்றில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், கல்லீரலில் சேரக்கூடிய கொழுப்புக்களையும் குறைக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளது.
எப்படிச் சாப்பிடலாம்? ஒரு கப் கோவைக்காய் பொரியலை வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதிக எண்ணெய் இல்லாமல் பொரியல் அல்லது கூட்டாகத் தயாரித்துச் சாப்பிடலாம்.
4. முருங்கைக்கீரை
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற நான்காவது உணவுப் பொருள் தான் முருங்கைக்கீரை. முருங்கைக்கீரையில் குளோரோஜெனிக் அமிலம் (Chlorogenic Acid), ஐசோதயோசயனேட்ஸ் (Isothiocyanates) போன்ற தாவரச் சேர்மங்கள் உள்ளன. இவை உணவுக்குப் பிறகு அதிகரிக்கும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கக்கூடும். மேலும், முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் புரதச்சத்தும் கிடைக்கின்றன.
எப்படிச் சாப்பிடலாம்? அரை கப் முதல் ஒரு கப் வரை முருங்கைக்கீரை பொரியலை வாரத்திற்கு மூன்று முறை சாப்பிடலாம். விரும்பினால் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். முருங்கைக்கீரை பொரியல் தயாரிக்கும் போது அதிக தேங்காய் சேர்ப்பதற்குப் பதிலாக, சிறிதளவு பாசிப்பருப்பு சேர்த்துச் சமைக்கலாம். இதன் மூலம் உணவில் புரதச்சத்தும் அதிகரிக்கும்.
5. வாழைப்பூ
சர்க்கரை நோயாளிகளுக்கான ஐந்தாவது சிறந்த காய்கறி தான் வாழைப்பூ. ஏனெனில் வாழைப்பூவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தைச் சீராக்குவதோடு, உணவுக்குப் பிறகு ரத்த சர்க்கரை வேகமாக அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த உதவக்கூடும்.
எப்படிச் சாப்பிடலாம்? ஒரு கப் வாழைப்பூ பொரியலை வாரத்திற்கு இரண்டு முறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். வேண்டுமானால் பருப்பு சேர்த்துக் கூட்டாகவும் தயாரித்து சாப்பிடலாம்.
6. வாழைத்தண்டு
ஆறாவது சிறந்த காய்கறி வாழைத்தண்டு. ஏனெனில் வாழைத்தண்டில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ளன. அதே சமயம் கலோரி அளவு குறைவாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கும் இது சிறந்த உணவாகும். வாழைத்தண்டு சாப்பிடுவதால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வு கிடைக்கலாம். இதனால் தேவைக்கு அதிகமாக உணவு சாப்பிடுவதைத் தவிர்க்க உதவுகிறது.
எப்படிச் சாப்பிடலாம்? ஒரு கப் வாழைத்தண்டு கூட்டை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடலாம். வாழைத்தண்டு ஜூஸ் குடிப்பதைவிட நார்ச்சத்துடன் முழுமையாகச் சமைத்துச் சாப்பிடுவது சிறந்தது.
7. அவரைக்காய்
அவரைக்காய் ஒரு பருப்பு வகையைச் சேர்ந்த காய்கறியாகும். இதில் நார்ச்சத்தும் தாவரப் புரதமும் நிறைந்துள்ளன. இவை உணவின் ஒட்டுமொத்த கிளைசெமிக் தாக்கத்தைக் குறைக்க உதவக்கூடும். மேலும், பீன்ஸ் மற்றும் கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளையும் இதே வகையில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
எப்படிச் சாப்பிடலாம்? ஒரு கப் அவரைக்காய் பொரியலை வாரத்திற்கு மூன்று முறை சாப்பிடலாம். குறைந்த எண்ணெயில் பொரியல் அல்லது கூட்டு தயாரித்துச் சாப்பிடுவது நல்லது.
8. வெந்தயக்கீரை
வெந்தயக்கீரையில் நார்ச்சத்தும் பல்வேறு ஊட்டச்சத்துகளும் உள்ளன. குறிப்பாக, வெந்தயத்தில் காணப்படும் கேலக்டோமன்னன் (Galactomannan) என்ற கரையக்கூடிய நார்ச்சத்து, குடலில் குளுக்கோஸ் உறிஞ்சப்படும் வேகத்தைக் குறைக்க உதவக்கூடும்.
எப்படிச் சாப்பிடலாம்? ஒரு கப் வெந்தயக்கீரை பருப்பு கூட்டை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடலாம். கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைப்பது சத்தான உணவுக் கலவையாக இருக்கும்.
9. கத்திரிக்காய்
கத்திரிக்காயின் ஊதா நிறத் தோலில் பாலிபினால்கள், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் நசுனின் (Nasunin) போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட் சேர்மங்கள் உள்ளன. இவை உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவக்கூடும். கத்திரிக்காயில் கலோரியும் குறைவாக உள்ளது. ஆனால், இது சமைக்கும்போது அதிக எண்ணெயை உறிஞ்சும் தன்மை கொண்டது.
எப்படிச் சாப்பிடலாம்? ஒரு கப் கத்திரிக்காய் பொரியலை வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடலாம். கத்திரிக்காய் பஜ்ஜி, எண்ணெய் கத்திரிக்காய் போன்றவற்றைத் தவிர்த்து, குறைந்த எண்ணெயில் பொரியல் அல்லது கூட்டாகத் தயாரித்துச் சாப்பிடுவது நல்லது.
10. சுரைக்காய்
சுரைக்காயில் சுமார் 95 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். மேலும், சுரைக்காயில் உள்ள நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் உடலுக்குத் தேவையான நீரேற்றத்தைப் பராமரிக்கவும், வயிறு நிறைந்த உணர்வைப் பெறவும் உதவுகின்றன.
எப்படிச் சாப்பிடலாம்? ஒரு கப் சுரைக்காய் கூட்டை வாரத்திற்கு மூன்று முறை சாப்பிடலாம். சுரைக்காயை முழுமையாகச் சமைத்துச் சாப்பிடுவதே சிறந்தது.
யாரெல்லாம் மருத்துவரின் ஆலோசனையுடன் சாப்பிட வேண்டும்?
* சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் ரத்தம் உறைவதைத் தடுக்கும் வார்ஃபரின் (Warfarin) போன்ற மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் உணவில் மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.
* அதேபோல், சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் அல்லது இன்சுலின் எடுத்துக்கொள்பவர்கள் உணவுப் பழக்கத்தை மாற்றும்போது ரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும். காய்கறிகள் மட்டும் சர்க்கரை நோயைக் குணப்படுத்தாது அல்லது மருந்துகளுக்கு மாற்றாக இருக்காது.



Click it and Unblock the Notifications
