முட்டையை எப்பவும் ஒரே மாதிரி மசாலா செய்யாம.. ஒருடைம் இப்படி கீமா மசாலா செய்யுங்க..

Posted By:

Muttai Kheema Masala Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்திக்கு அடிக்கடி முட்டை சைடு டிஷ் செய்வீர்களா? அதுவும் முட்டையை எப்போதும் ஒரே மாதிரி தான் சைடு டிஷ் செய்வீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் முட்டை சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் முட்டை கீமா மசாலா செய்யுங்கள். இந்த மசாலாவின் ஸ்பெஷலே முட்டையை வேக வைத்து அதை துருவி செய்வதாகும். இந்த சுவையில் முட்டையை சமைத்து வீட்டில் உள்ளோருக்கு கொடுக்கும் போது, வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.

Muttai Kheema Masala How To Make Simple And Tasty Egg Kheema Masala For Chapati

உங்களுக்கு இந்த முட்டை கீமா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை கீமா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (இரு துண்டுகளாக்கப்பட்டது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* பாவ் பாஜி மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
* வேக வைத்து துருவிய முட்டை - 4
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, இரண்டு துண்டுகளாக்கப்பட்ட பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக மிதமான தீயில் வைத்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சிறிது நீரை ஊற்றி கிளறி, 5 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் வேக வைத்து துருவிய முட்டையை சேர்த்து கிளறி, 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான முட்டை கீமா மசாலா தயார்.

[ of 5 - Users]
Story first published: Thursday, November 26, 2026, 22:11 [IST]
Desktop Bottom Promotion