Latest Updates
-
முட்டையை எப்பவும் ஒரே மாதிரி மசாலா செய்யாம.. ஒருடைம் இப்படி கீமா மசாலா செய்யுங்க.. -
தலைமுடி வறண்டும், அதிக சிக்கலுடனும் இருக்கா? அப்ப இந்த ஹேர் மாஸ்க்கை வாரம் 1 முறை போடுங்க.. -
12 ராசிக்காரர்களின் காதல் மற்றும் ரொமான்ஸ் ஸ்டைல் எப்படி இருக்கும்? உங்க ராசிப்படி நீங்க எப்படின்னு பாருங்க.. -
எலுமிச்சை தோலை இனி குப்பையில் போடாதீங்க... இந்த 5 விஷயங்களுக்கு பயன்படுத்துங்க! -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - இப்படி செய்யுங்க.. நாக்குல அரிப்பே ஏற்படாது! -
இரத்த சர்க்கரை குறையணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 10 காய்கறிகளை சாப்பிடுங்க.. -
டிசம்பர் மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
தேங்காய் தோசையும், முருங்கைக்கீரை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 26, 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க குடும்பத்தில் புயலடிக்கப் போகுதாம் -
18 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் கேது: 2028 வரை இந்த 3 ராசிக்காரங்கள யாராலும் அசைக்க முடியாது!
நவம்பர் இறுதியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
Chaturgrahi Yog On 30 November 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் சேர்த்து யோகங்களையும் உருவாக்கும். அவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு வகையில் காணப்படும்.
அந்த வகையில் நவம்பர் 30 ஆம் தேதி ஒரு அற்புதமான யோகம் உருவாகவுள்ளது. ஏனெனில் இந்நாளில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். அப்படி நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே இருக்கும் குரு, செவ்வாய் மற்றும் கேதுவுடன் சேர்ந்து சதுர்கிரக யோகத்தை உருவாக்கவுள்ளார்.

இப்படி சிம்ம ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம், வேலை மற்றும் வணிகத்தில் நல்ல உயர்வை காணவுள்ளனர். இப்போது நவம்பர் 30 ஆம் தேதி சிம்ம ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 5 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி ரீதியாக எடுக்கும் முடிவுகள் நல்ல பலனைத் தரும். இக்காலத்தில் செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை தரும். இருந்தாலும், அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்த்து, நன்கு யோசித்து முடிவெடுத்தால், மோசமான விளைவுகள் அல்லது இழப்புக்களைத் தவிர்க்கலாம்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல லாபம் கிடைக்கும். கடன் தொல்லைகளில் இருந்து விடுபடலாம். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும், தலைமைத்துவ திறன்களும் மேம்படும். சில முக்கியமான பணிகளில் வேலை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சிலருக்கு புதிய நட்புகள் கிடைக்கும். இந்த நட்புகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கலாம். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் தேடி வரலாம். மொத்தத்தில் வாழ்க்கை செழிப்பாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் சதுர்கிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட காலமாக தடைபட்டு வநத வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு அனுபவசாலிகளின் வழிகாட்டுதல் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

