2027-ல் ராகு-கேதுவால் கஷ்டங்கள் தீர்ந்து, செழிப்பான வாழ்க்கையை வாழப்போகும் 6 ராசிக்காரங்க இவங்க தான்!

New Year 2027 Horoscope: ஜோதிடத்தில் ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்களாகும். இந்த இரண்டு கிரகங்களுக்கும் மற்ற கிரகங்களைப் போல் சொந்த ராசி எதுவும் இல்லை. கிரகங்களிலேயே சனி பகவானுக்கு அடுத்தப்படியாக ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியவர்கள் ராகு மற்றும் கேது. அதாவது இவ்விரு கிரகங்களும் ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார்கள். இதனால் இந்த இரண்டு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

New Year 2027 Horoscope Rahu Ketu Will Bring Prosperity To These Zodiac Signs

என்ன தான் ராகு மற்றும் கேது கொடிய கிரகங்களாக கருதப்பட்டாலும், இவ்விரு கிரகங்களுமே ஒருவரை செல்வந்தராக்கும் ஆற்றல் கொண்டவர்கள். தற்போது ராகு மற்றும் கேது கும்பம் மற்றும் சிம்ம ராசிகளில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, டிசம்பர் 05 ஆம் தேதி ராகு மற்றும் கேது ராசியை மாற்றவுள்ளனர். அப்போது ராகு மகர ராசிக்கும், கேது கடக ராசிக்கும் செல்லவுள்ளார்.

இந்த ராசிகளில் ராகு, கேது 2028 ஆம் ஆண்டின் ஜூலை மாதம் வரை இருப்பார். இதனால் 2027 ஆம் ஆண்டு முழுவதும் ராகு, கேது இந்த ராசிகளில் தான் பயணிக்கவுள்ளனர். இதனால் 2027 ஆம் ஆண்டு முழுவதும் சில ராசிக்காரர்களின் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் குறைந்து, வாழ்க்கை சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மகரம்

ராகு கேது பெயர்ச்சி மகர ராசிக்காரர்களுக்கு முக்கியமானதாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு, அதன் மூலம் வாழ்வில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். வேலை மற்றும் வணிகத்தில் தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவீர்கள். புதிய நட்புகளால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.

மீனம்

ராகு கேது பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நண்பர்களின் உதவி கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். முதலீடுகளில் சிந்தித்து எடுக்கும் முடிவுகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேஷம்

ராகு கேது பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். வணிகர்களின் திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும். புதிதாக தொழிலை தொடங்க நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் தேடி வரக்கூடும்.

ரிஷபம்

ராகு கேது பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்கள் தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வணிகர்களுக்கு புதிய ஐடியாக்களால் நிறைய லாபம் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். ஒவ்வொரு முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமாக தடைபட்டு வந்த வேலைகள் இடையூறு இல்லாமல் வெற்றிகரமாக முடிவடையும்.

மிதுனம்

ராகு கேது பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். வெளிநாட்டில் படிக்க அல்லது வேலை செய்ய நினைப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் அனுபவசாலிகளின் வழிகாட்டுதல்கள் கிடைக்கும்.

சிம்மம்

ராகு கேது பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் நிதி நிலை சிறப்பாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வணிகர்களுக்கு புதிய நட்புகளால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதோடு, எதிர்காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, November 27, 2026, 11:20 [IST]
Desktop Bottom Promotion