Latest Updates
-
இந்தியாவின் 'தூங்கும் மாநிலம்' என்று அழைக்கப்படும் மாநிலம் எது தெரியுமா? இந்த பெயர் ஏன் வந்தது தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. இப்படி ஒருடைம் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட அடிக்கடி செய்ய சொல்லி கேட்பாங்க.. -
இந்த 6 உணவுகளை அதிகமா சாப்பிடாதீங்க.. இல்லன்னா சிறுநீரக கற்கள் வந்துவிடும்.. -
பெங்காலி ஸ்டைல் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி புலாவ் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
2027-ல் ராகு-கேதுவால் கஷ்டங்கள் தீர்ந்து, செழிப்பான வாழ்க்கையை வாழப்போகும் 6 ராசிக்காரங்க இவங்க தான்! -
உலகம் முழுக்க பிறந்த நாளுக்கு ஏன் கேக் வெட்டி மெழுகுவர்த்தியை ஊதுகிறார்கள்? அதன் வரலாறு என்ன தெரியுமா? -
1 முள்ளங்கியும், அரிசி மாவும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணுங்க.. சைடு டிஷ்ஷே தேவைப்படாது! -
நவம்பர் 27, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
நவம்பர் இறுதியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
முட்டையை எப்பவும் ஒரே மாதிரி மசாலா செய்யாம.. ஒருடைம் இப்படி கீமா மசாலா செய்யுங்க..
விருச்சிகம் செல்லும் புதன்: டிசம்பரில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா?
Mercury Transit In Scorpio 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். இந்த புதனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது புதன் சுக்கிரனின் துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த புதன் டிசம்பர் 02 ஆம் தேதி விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார்.

இந்த விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். புதன் செவ்வாயின் ராசிக்குள் நுழைவதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்படும். அதுவும் சில ராசிக்காரர்கள் இந்த புதன் பெயர்ச்சியால் தொழிலில் நல்ல வளர்ச்சியை காண்பதோடு, குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி தொழிலில் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தையும் பெறுவார்கள். இப்போது புதன் விருச்சிக ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் பணம் குறித்த கவலைகள் குறையும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.
கன்னி
கன்னி ராசியின் 3 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடைய வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. வணிகர்களின் திட்டங்கள் நல்ல லாபத்தைத் தரலாம். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் பணிபுரிபவர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. புதிய வருமானத்தை உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். புதிய நட்புகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் மனதில் உள்ள திட்டங்களை தைரியமாக தொடங்குவீர்கள் மற்றும் இது நல்ல பலனையும் தரும்.
மிதுனம்
மிதுன ராசியின் 6 ஆவது வீட்டிற்கு புதன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் முடிவெடுக்கும் திறன் மேம்படும். பணியிடத்தில் உங்களின் யோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். அதோடு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்களும் வழங்கப்படலாம். மார்கெட்டிங், மீரியா, கல்வி தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு இப்பெயர்ச்சி சிறப்பானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
