முகத்தில் பிக்மென்டேஷன் பிரச்சனையா? அப்ப இந்த தேங்காய் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க..

Coconut Oil Face Masks In Tamil: முகத்தில் ஆங்காங்கே கரும்புள்ளிகள், திட்டுத்திட்டான கருமை மற்றும் பிக்மென்டேஷன் பிரச்சனை இருக்கிறதா? குறிப்பாக நெற்றி, கன்னங்கள் மற்றும் உதட்டைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்படும் கருமை முகத்தின் இயற்கையான பொலிவைக் குறைக்கலாம். இதற்காக பலரும் விலையுயர்ந்த கிரீம்கள், சீரம்கள் எனப் பல பொருட்களைப் பயன்படுத்தியும் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் இருக்கலாம்.

5 DIY Coconut Oil Face Masks To Reduce Facial Pigmentation Naturally

நமது சருமத்திற்கு நிறமளிக்கும் மெலனின் என்ற நிறமியின் உற்பத்தி அதிகரிக்கும்போது பிக்மென்டேஷன் ஏற்படுகிறது. அதிகப்படியான வெயில், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் சருமத்தில் ஏற்படும் எரிச்சல் போன்றவை இந்த நிறமியின் அதிகரிப்புக்கு காரணமாக இருக்கலாம். இந்நிலையில், சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்க உதவும் தேங்காய் எண்ணெயுடன் சில இயற்கையான பொருட்களைக் கலந்து ஃபேஸ் மாஸ்க்காகப் பயன்படுத்தும் போது, பிக்மென்டேஷன் பிரச்சனையை குறைக்கலாம். இப்போது அத்தகைய 5 முறைகளைக் காண்போம்.

1. தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஃபேஸ் மாஸ்க்

எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதம் அளிக்க உதவுகிறது. இருப்பினும், எலுமிச்சை சாறு சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். எனவே எப்போதும் எலுமிச்சையை முகத்தில் நேரடியாகப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக சென்சிடிவ் சருமத்தினர் அறவே தவிர்க்க வேண்டும்.

* இந்த ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

2. தேங்காய் எண்ணெய் மற்றும் மஞ்சள் தூள் ஃபேஸ் மாஸ்க்

மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த மஞ்சள் தூளை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும் போது, அது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த ஃபேஸ் மாஸ்க் வறண்ட அல்லது நார்மல் சருமத்தினருக்கு ஏற்றது.

* இந்த ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதற்கு ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

3. தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை ஃபேஸ் மாஸ்க்

சருமம் வறண்டு, எரிச்சலாக அல்லது அசௌகரியமாக உணர்ந்தால், கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் ஒரு இதமான கலவையாக இருக்கும். இதில் கற்றாழை பொதுவாக சருமத்தை சாந்தப்படுத்த பயன்படுகிறது. அதே சமயம் தேங்காய் எண்ணெய் ஈரப்பதத்தைத் தக்கவைக்க உதவுகிறது.

* இந்த ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதற்கு ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.
* பின் இதனை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* குறிப்பாக சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் இதைப் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியம்.

4. தேங்காய் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ ஃபேஸ் மாஸ்க்

வைட்டமின் ஈ ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட்டாகச் செயல்படுகிறது. இது சருமத்தை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. அதே சமயம், தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. வறண்ட மற்றும் பொலிவற்ற சருமம் கொண்டவர்களுக்கு இந்த ஃபேஸ் மாஸ்க் ஏற்றது.

* இந்த ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதற்கு ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் ஒரு வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதை முகத்தில் தடவி, 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும்.

5. தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஃபேஸ் மாஸ்க்

தேன் சருமத்தில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது. அதுவும் தேங்காய் எண்ணெயுடன் இதைச் சேர்க்கும் போது, ​​வறண்ட சருமத்தை மென்மையாகவும் மிருதுவாகவும் மாற்ற இது பெரிதும் உதவும்.

* இந்த ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.
* பின் இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து குளிர்ந்த தண்ணீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Friday, November 27, 2026, 18:56 [IST]
Desktop Bottom Promotion