Latest Updates
-
டிசம்பர் 05-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி - இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது.. -
December 2026 Horoscope: டிசம்பர் மாதத்தில் தோல்விகளால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பன்னீர் யாக்னி - இதுக்கு வெங்காயம் தக்காளியே தேவைப்படாது.. எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. டிசம்பர் மாசம் எப்படி இருக்கும்ன்னு சொல்றோம்... -
இந்த 5 ராசி ஆண்கள் சரியான 'அம்மா பிள்ளையாக' இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த பொருட்களை மிக்சி ஜாரில் தெரியாம கூட அரைச்சுராதீங்க - இல்லனா மிக்சி வீணாப்போயிரும் -
முகத்தில் பிக்மென்டேஷன் பிரச்சனையா? அப்ப இந்த தேங்காய் எண்ணெய் ஃபேஸ் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க.. -
திருப்பதியில் பக்தர்கள் ஏன் மொட்டையடிக்கிறார்கள்? அதற்குப் பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
விருச்சிகம் செல்லும் புதன்: டிசம்பரில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்தியாவின் 'தூங்கும் மாநிலம்' என்று அழைக்கப்படும் மாநிலம் எது தெரியுமா? இந்த பெயர் ஏன் வந்தது தெரியுமா?
கர்நாடகா ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வழக்கத்தை விட வீட்ல எல்லாரும் அதிகமா சாப்பிடுவாங்க
Karnataka Style Poori Masala Recipe in Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி அல்லது பூரி செய்வீர்களா? சப்பாத்தி அல்லது பூரி சுடும் போது, அதற்கு சைடிஷ்ஷாக எப்போதும் உருளைக்கிழங்கு மசாலாவைத் தான் செய்வீர்களா? அதுவும் அந்த உருளைக்கிழங்கு மசாலாயும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சற்று வித்தியாசமாக கர்நாடகா ஸ்டைல் பூரி மசாலாவை செய்யுங்கள்.

இந்த பூரி மசாலா வழக்கமான உருளைக்கிழங்கு போல அல்லாமல் வித்தியாசமான சுவையில் இருக்கும். இந்த பூரி மசாலா கர்நாடகா முழுவதும் மிகவும் பிரபலமானதாகும். இந்த ஸ்டைலில் மசாலா செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட இன்னும் அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கும் போது, அவர்கள் ஆசையாக சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு கர்நாடகா ஸ்டைல் பூரி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கர்நாடகா பூரி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- கால் கிலோ உருளைக்கிழங்கு
- 1 கப் தண்ணீர் (உருளைக்கிழங்கை வேகவைக்க)
- 1 கப் நறுக்கிய பெரிய வெங்காயம்
- ½ கப் நறுக்கிய தக்காளி
- 1 ஸ்பூன் இஞ்சி (பொடியாக நறுக்கியது)
- 2 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 4 பச்சை மிளகாய் (நீளமாக கீறியது)
- தேவையான அளவு உப்பு
- 1 சிட்டிகை பெருங்காயம்
- ¼ கப் தண்ணீர்
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது)
- ½ ஸ்பூன் கடுகு
-1 ஸ்பூன் சீரகம்
- கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் எலுமிச்சைச்சாறு
செய்முறை:
- உருளைக்கிழங்குகளை ஓடும் தண்ணீரில் நன்றாகக் கழுவவும். தோலை உரித்து, 1 அங்குல அளவில் சிறு துண்டுகளாக நறுக்கவும். அவற்றை ஒரு பிரஷர் குக்கர் போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றவும்.
- மிதமான தீயில், ஒரு விசில் வரும் வரை குக்கரில் வேகவைக்கவும். உருளைக்கிழங்குகள் வெந்துகொண்டிருக்கும்போது, வெங்காயத்தை நறுக்கவும், தக்காளி, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய்களை சிறு துண்டுகளாக வெட்டவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் சீரகம், கடுகு, கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். பருப்பு வகைகள் பொன்னிறமாகி மணம் வரும் வரை வதக்கவும்.
- பின்னர் கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து, கறிவேப்பிலை மொறுமொறுப்பாகும் வரை வதக்கவும். அதனுடன் பெருங்காயத் தூள் தூவவும்.
- பிறகு வெங்காயம் மற்றும் இஞ்சியைச் சேர்த்து, மிதமான தீயில், அவற்றின் பச்சை வாசனை நீங்கி இளஞ்சிவப்பு நிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். தக்காளி குழைந்து, அதன் பச்சை வாசனை முற்றிலும் நீங்கும் வரை அடிக்கடி கிளறவும்.
- வேகவைத்த உருளைக்கிழங்கை வேக வைத்த தண்ணீருடன் சேர்க்கவும். குழம்பு கெட்டியாகும் வரை அவற்றை லேசாக மசிக்கவும். தேவைப்பட்டால் சிறிது சூடான நீரை ஊற்றவும்.
- சுவையை சரிபார்த்து, தேவைப்பட்டால் மேலும் உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- குழம்பு கெட்டியாகும் வரை 3 முதல் 4 நிமிடங்கள் மூடி வைத்து சமைக்கவும்.
- கொத்தமல்லி இலைகளைத் தூவவும். பூரி மசாலாவை சூடான பூரிகளுடன் பரிமாறவும். இறுதியாக சிறிது எலுமிச்சை சாறு பிழியலாம்.
- அவ்வளவுதான் கர்நாடகா ஸ்டைல் பூரி மசாலா ரெடி!



Click it and Unblock the Notifications
