டிசம்பர் 05-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி - இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது..

Venus Transit In Swati Nakshatra On 05 December 2026: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன் தற்போது தனது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இப்படி சொந்த ராசியில் சுக்கிரன் இருப்பதால் பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.

மேலும் இவர் தற்போது சித்திரை நட்சத்திரத்தில் உள்ளார். இந்நிலையில் இந்த சுக்கிரன் டிசம்பர் 05 ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் சுமார் 17 நாட்கள் வரை இருப்பார். இந்த சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி ராகு ஆவார். ஜோதிடத்தில் சுக்கிரனும், ராகுவும் நண்பர்களாக கருதப்படுகின்றனர்.

Venus Transit In Swati Nakshatra On 05 December 2026 These Zodiac Signs Will Get More Money Benefits

எனவே சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரப்போகிறது. அதுவும் நிதி நிலையில் முன்னேற்றம், தொழில் அல்லது வியாபாரத்தில் வளர்ச்சி ஆகியவற்றை உண்டாக்கும். இப்போது சுக்கிரன் சுவாதி நட்சத்திரத்திற்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது ரிஷப ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகளை தரப்போகிறது. தொழில் ரீதியாக, பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நீண்ட காலமாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். உங்களின் எதிரிகளை வெற்றி பெறுவீர்கள். ஆனால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது சாதகமாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் படைப்பாற்றல் அதிகரிக்கும். கலைத்துறையில் இருப்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். காதல் உறவுகளில் நாட்டம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல பொருள் வசதிகளைப் பெறுவீர்கள். நிதி ஆதாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

துலாம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடைபெறும். மேலும் செல்வமும் பெருகும். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளுது. திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். முக்கியமாக நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பபுள்ளது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion