உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. டிசம்பர் மாசம் எப்படி இருக்கும்ன்னு சொல்றோம்...

December 2026 Monthly Numerology Predictions In Tamil: ஒருவரது எதிர்காலத்தை கணிக்கும் சக்தி எண்களுக்கு உள்ளதாக ஒரு நம்பிக்கை உள்ளது. எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஜோதிடத்தின் ஒரு கிளை தான் எண் கணிதம். இந்த எண் கணிதத்தில், ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு அந்நபரின் எதிர்காலம், குணாதிசயங்கள், பலம், பலவீனம் போன்ற பல விஷயங்களை அறியலாம்.

2026 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் உங்கள் பிறந்த தேதிப்படி எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால், தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே எண் கணிதத்தின் படி, ஒருவரது பிறந்த தேதிப்படி 2026 டிசம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

December 2026 Monthly Numerology Predictions In Tamil

எண் 1

1, 10, 19 அல்லது 28 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் தொழில் மற்றும் வேலை விஷயங்களில் முன்னேற்றம் தரக்கூடிய மாதமாக இருக்கலாம். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். அலுவலகத்தில் உங்களுடைய திறமைகள் அங்கீகரிக்கப்பட்டு, பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலை தொடர்பான நல்ல செய்தி கிடைக்கலாம். நிதி நிலை மேம்படுவதுடன் வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வழிகளும் திறக்கலாம்.

எண் 2

2, 11, 20 அல்லது 29 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடக்கூடிய மாதமாக இருக்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வருமான வழிகள் உருவாகி நிதி நிலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் இனிமையான தருணங்களைச் செலவிடுவீர்கள். கணவன் - மனைவிக்கு இடையேயான புரிதலும் அன்பும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எண் 3

3, 13, 21 அல்லது 30 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கலாம். வேலை மற்றும் தொழிலில் பல புதிய சாதனைகளைப் படைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். அலுவலகத்தில் உங்களுடைய கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கும் இந்த மாதம் சாதகமாக அமையலாம். நிதி நிலை மேம்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

எண் 4

4, 13, 22 அல்லது 31 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் கடின உழைப்புக்கான பலன்களைப் பெற்றுத் தரக்கூடியதாக இருக்கலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த வேலைகளில் வெற்றி கிடைக்கலாம். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படுவதுடன், தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் உருவாகலாம். நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக முடிவடையாமல் இருந்த வேலைகள் இம்மாதத்தில் முடிவடையலாம்.

எண் 5

5, 14 அல்லது 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் நிதி ஆதாயங்களைத் தரக்கூடியதாக இருக்கலாம். வேலை மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ற நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கலாம். இதன் மூலம் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. காதல் மற்றும் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடும் வாய்ப்புகளும் கிடைக்கலாம்.

எண் 6

6, 15 அல்லது 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் டிசம்பர் மாதத்தில் பல்வேறு விஷயங்களில் சாதகமான மாற்றங்களை காணலாம். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து அன்பும் புரிதலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை மேம்படுவதுடன் வாழ்க்கைக்குத் தேவையான வசதிகளும் அதிகரிக்கலாம். வேலை செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். தொழிலதிபர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படலாம்.

எண் 7

7, 16 அல்லது 25 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும் ஏற்ற காலமாக இருக்கலாம். உங்களுடைய படைப்பாற்றல் அதிகரிக்கலாம். இதனால் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணக்கூடும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கான ஆர்வம் அதிகரிக்கலாம். நீண்ட நாட்களாக இருந்து வந்த பணப் பிரச்சனைகள் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிட வாய்ப்புகள் கிடைக்கலாம்.

எண் 8

8, 17 அல்லது 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் தங்களுடைய உழைப்பையும் திறமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவுக்கு வரலாம். பணம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கலாம். வேலை செய்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளை எடுக்காமல் பொறுமையுடனும் திட்டமிட்டும் செயல்படுவது அவசியம்.

எண் 9

9, 18 அல்லது 27 ஆம் தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு டிசம்பர் மாதம் உற்சாகமும் புதிய வாய்ப்புகளும் நிறைந்த மாதமாக இருக்கலாம். வேலை மற்றும் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். ஏற்கனவே திட்டமிட்டிருந்த தொழில் முயற்சிகளைச் செயல்படுத்துவதன் மூலம் நல்ல லாபத்தைப் பெறலாம். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அன்பும் அதிகரிக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, November 27, 2026, 22:20 [IST]
Desktop Bottom Promotion