இந்த 5 ராசி ஆண்கள் சரியான 'அம்மா பிள்ளையாக' இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?

அனைவரின் வாழ்க்கையிலும் அம்மா என்பவர் தவிர்க்க முடியாத இடத்தை வகிக்கிறார். எல்லோருக்குமே அவர்களின் அம்மா மீது பாசம் இருக்கும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு அவர்களின் அம்மா மீது அளவற்ற பிணைப்பு இருக்கும். இந்த பிணைப்பு பெரும்பாலும் அவர்களின் ஆளுமை, உணர்வுகள் மற்றும் உறவுகளை வடிவமைக்கிறது. இந்தப் பிணைப்பு அவர்களை அம்மா மீது அக்கறையுள்ளவராகவும், விசுவாசமானவராகவும், உணர்ச்சிமிக்கவராகவும் மாற்றும். அம்மா மீதான அவர்களின் இந்த அதீத பாசம் அவர்களின் ஆளுமையை வடிவமைப்பதாகக் கருதப்படுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எவ்வளவு வயதானாலும் அம்மாப் பிள்ளையாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

Men Zodiac Signs Who Are Mama s Boy

கடகம்

கடக ராசியின் அதிபதி சந்திரனாவார். இது உணர்ச்சிகள், குடும்பம் மற்றும் அரவணைப்பைக் கட்டுப்படுத்துகிறது. கடக ராசிக்காரர்கள் இயல்பிலேயே தங்கள் தாயிடம் அதிக பாசம் கொண்டவர்ளாக இருப்பார்கள். அவர்கள் வீட்டையும், குடும்பத்தையும் ஆழமாக நேசிக்கிறார்கள். தாயுடனான அவர்களின் பிணைப்பு வலுவானது மற்றும் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கக் கூடியது. கடக ராசி ஆண்கள் அக்கறையும் பாதுகாப்பும் கொண்டவர்கள், மேலும் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பு பெரும்பாலும் தங்கள் தாயின் ஆலோசனையைக் கேட்டு அதன்படியே செயல்படுவார்கள்.

ரிஷபம்

சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசியினர் உறவுகளையும், ஸ்திரத்தன்மையையும் விரும்புகிறார்கள். ரிஷப ராசி ஆண்கள் மிகவும் யதார்த்தமானவர்களாக இருப்பார்கள், மேலும் தங்கள் குடும்பத்தின் மீது, குறிப்பாகத் தங்கள் தாயிடம், மிகுந்த மனப் பாதுகாப்பைக் காண்பார்கள். ஒரு தாய் வழங்கும் ஆறுதலையும் அரவணைப்பையும் அவர்கள் எப்போதும் விரும்புகிறார்கள், மேலும் பெரும்பாலும் அவருடன் நெருங்கிய உறவைப் பேணுகிறார்கள். ரிஷப ராசி ஆண்கள் பொதுவாகவே பாரம்பரியத்தை மதிக்கும், விசுவாசமான மற்றும் பாசமுள்ள மகன்களாக இருப்பார்கள்.

மீனம்

மீன ராசி நெப்டியூனால் ஆளப்படுகிறது, மேலும் சந்திரனாலும் செல்வாக்கு செலுத்தப்படுகிறது. இது அவர்களை அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், உள்ளுணர்வு மிக்கவர்களாகவும் மாற்றுகிறது. மீன ராசி ஆண்கள் பெரும்பாலும் தங்கள் தாயுடன் மென்மையான மற்றும் ஆழமான பிணைப்பைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் உணர்ச்சிபூர்வமான ஆதரவிற்காகத் தங்கள் தாயைச் சார்ந்திருக்கிறார்கள் மற்றும் ஆழமான பாசப் பிணைப்பை உணர்கிறார்கள். இந்தப் பிணைப்பு, உலகில் அவர்கள் பாதுகாப்பாக உணர உதவுகிறது.

கன்னி

கிரகங்களின் இளவரசரான புதனால் ஆளப்படும் கன்னி ராசியினர் எதார்த்தமானவர்களாகவும், பொறுப்புள்ளவர்களாகவும் இருப்பார்கள். கன்னி ராசி ஆண்கள் பெரும்பாலும் தங்கள் அம்மாவை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்வார்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய உரையாடலை விரும்புவார்கள். அவர்கள் அத்தியாவசிய உதவிகள் மற்றும் ஆலோசனைகள் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்துவார்கள். அவர்களின் பிணைப்பு அதிக உணர்ச்சிப்பூர்வமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அன்றாட கவனிப்பு மற்றும் ஆதரவின் மூலம் அது வலுவாக இருக்கும்.

விருச்சிகம்

புளூட்டோ மற்றும் செவ்வாயால் ஆளப்படும் விருச்சிக ராசிக்காரர்கள் தீவிரமான மற்றும் அதிகமாக உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். விருச்சிக ராசி ஆண்கள் பெரும்பாலும் தங்கள் அம்மாக்களுடன் ஒரு ரகசிய சக்திவாய்ந்த பிணைப்பைக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகக் காட்டாமல் இருக்கலாம், ஆனால் அவர்களின் அம்மா வழங்கும் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் மதிக்கிறார்கள். இந்த இணைப்பு அவர்களின் உணர்ச்சி உலகத்தை ஆழமாக வடிவமைக்கும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Desktop Bottom Promotion