Latest Updates
-
இந்தியாவிலேயே மிகவும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
காரசாரமான ஹைதராபாத் சிக்கன் கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தரமான டேஸ்ட்ல இருக்கும் -
சனிபகவானால் டிசம்பர் 11 முதல் கஷ்டங்களை அனுபவிக்கபோகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
தாபா ஸ்டைல் மட்டர் பன்னீர் ரெசிபி - இந்த பக்குவத்துல பன்னீரை செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வங்கி எது? அதன் பெயர் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 நாள் குடிங்க.. உடல் எடை, பிபி, சுகர் எல்லாம் தானா குறையும்.. -
நவம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
டிசம்பர் 05-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி - இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது.. -
December 2026 Horoscope: டிசம்பர் மாதத்தில் தோல்விகளால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பன்னீர் யாக்னி - இதுக்கு வெங்காயம் தக்காளியே தேவைப்படாது.. எப்படி செய்றதுன்னு பாருங்க..
வார ராசிபலன் ( November 29-டிசம்பர் 05)- இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2026 நவம்பர் 29 ஆம் தேதி முதல் 2026 டிசம்பர் 05 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த வாரம் வியாபாரிகள் பெரிய ஆதாயங்களைப் பெறலாம். சிக்கிய பணத்தையும் திரும்பப் பெறுவீர்கள். இதனால் உங்களின் அனைத்து வேலைகளும் சுமூகமாக முடியும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தினரின் கருத்துக்களை புறக்கணிக்காதீர்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் அவர்கள் தங்கள் இலக்குகளில் இருந்து விலகலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
ரிஷபம்
இந்த வாரம் அலுவலக வேலையில் இருப்பவர்கள் மிகவும் பிசியாக இருப்பார்கள். உங்களுக்கு அதிக பொறுப்புகள் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் எல்லா வேலைகளையும் திட்டமிட்ட முறையில் முடிக்க வேண்டும். அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். பணியிடத்தில் நீங்கள் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டும். வியாபாரிகள் முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். கடினமான சூழ்நிலைகளில் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உறவுகளைப் பொறுத்தவரை ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமணமாக இருந்தாலும் சரி, நீங்கள் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், இது உங்கள் தொழில் வாழ்க்கையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களின் சில முக்கியமான பணிகள் முழுமையடையாமல் இருக்க வாய்ப்புள்ளது. உடல்நிலை திடீரென மோசமடையக்கூடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வார தொடக்கத்தில் திட்டமிட்ட வேலைகள் சரியாக முடிவடைக் காண்பீர்கள். உங்களின் நிதி பிரச்சனைகள் தீர்க்கப்படும். கடனாக கொடுத்த பணம் மீண்டும் கைக்கு வந்து சேரும். பல்வேறு வழிகளில் வருமானம் ஈட்ட வாய்ப்பு இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்பையும் முயற்சிகளையும் உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள். வாரத்தின் பிற்பகுதி முதல் பாதியை விட மிகவும் சிறப்பாக இருக்கும். செல்வாக்கு மிக்கவர்களை சந்திப்பீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சற்று சிரமங்கள் நிறைந்ததாக இருக்கும். அதே சமயம் சில விஷயங்களில் சாதகமாகவும் இருக்கும். வேலை செய்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு இருக்கும். வேறொருவரின் தவறின் விளைவுகளை நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும். தேவையில்லாத செலவுகளை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பட்ஜெட் பாதிக்கப்பட்டு, கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும். தொழிலில் முதலீட்டை செய்ய நினைத்தால், அதற்கு முன் உங்கள் நலம் விரும்பிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும். வாகனத்தை கவனமாக ஓட்ட வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வாரத்தின் பிற்பகுதியில் சில பிரச்சினைகள் ஏற்படலாம்.
கன்னி
இந்த வாரம் வேலையை எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். அவசரமாக எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வாரத்தின் நடுப்பகுதியில் உங்கள் வேலையில் ஏற்படும் சில திடீர் தடைகளால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். தொழில் மற்றும் வணிகம் தொடர்பான வெற்றிக்காக சிறிது காத்திருக்க வேண்டியிருக்கும். வேலையில் இருப்பவர்கள் தங்கள் கடமைகளையும் பொறுப்புகளையும் சிறப்பாகச் செய்ய முயற்சிக்க வேண்டும். வாரத்தின் பிற்பகுதியில் நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் பொதுவாக உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
துலாம்
இந்த வாரம் உங்களுக்கு சவாலான வாரமாக இருக்கும். உடல்நல பிரச்சினைகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதிக்கும். அதிக செலவுகளைத் தவிர்க்கவும், பட்ஜெட்டை திட்டமிட்டு உருவாக்கவும். குடும்பத்தில் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை கொடுங்கள், ஏனெனில் மனக்கசப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. வேலையில் இடையூறு ஏற்படாமல் இருக்க உங்கள் வார்த்தைகளைக் கவனியுங்கள். நிதி நிலையற்ற தன்மை மற்றும் வணிக போட்டியாளர்கள் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கலாம். தோல்விகளைத் தவிர்க்க திட்டங்களை ரகசியமாக வைத்திருங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும். சூழ்நிலைகள் சாதகமாக இருக்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் இருந்து முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வணிகர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தொழிலை முன்னோக்கி எடுத்துச் செல்லும் திட்டங்கள் பலனளிக்கும். மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, சாதாரணமாக இருக்கும். பெற்றோர் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவு வாரம் முழுவதும் சுமூகமாக இருக்கும்.
தனுசு
இந்த வாரம் உங்கள் வேலைகளை முடிக்க அதிக உழைப்பு, அதிக முயற்சி மற்றும் அதிக நேரம் தேவைப்படும். சோம்பல் மற்றும் தற்பெருமையை கைவிட்டால், நல்ல வெற்றியைப் பெறலாம். இந்த வாரம் நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், உறவுகளை மதிக்க வேண்டும். நண்பர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்காதீர்கள். இல்லாவிட்டால் ஏமாற்றமடையக்கூடும். தொழிலதிபராக இருந்தால், பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எந்த விஷயத்தையும் கவனமாக சிந்தித்து முடிவுகளை எடுக்க வேண்டும். எதற்கும் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மகரம்
இந்த வாரம் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் திட்டமிட்ட வேலைகள் சரியான நேரத்தில் முடிவடையும். பரஸ்பர பேச்சுவார்த்தைகள் மூலம் சொத்து தொடர்பான தகராறுகள் தீர்க்கப்படும். தைரியம் மற்றும் வீரத்தால், மிகப்பெரிய வேலையையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். இந்த வாரம் உங்கள் நிதி நிலைமை மேம்படும். வேலை செய்பவர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கப்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தொழில்-வணிகம் தொடர்பான பயணம் வெற்றிகரமானதாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் வரும் அனைத்து சவால்களையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். பிரச்சனைகளை பார்த்துக் கொண்டு இருப்பதற்குப் பதிலாக, அவற்றுக்கான தீர்வுகளைக் காண முயற்சிக்க வேண்டும். வியாபாரிகள் நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருங்கள். வாரத்தின் முதல் பாதியில், செலவுகள் வருமானத்தை விட அதிகமாக இருக்கும். சிறந்த காதல் உறவைப் பேண, உங்கள் விருப்பங்களை உங்கள் காதல் துணையின் மீது திணிப்பதையோ அல்லது அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதையோ தவிர்க்க வேண்டும், இல்லையெனில் தற்காலிக பிரிவு ஏற்படலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அவர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலையில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து உதவியும், ஆதரவும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வணிகர்கள் மேற்கொள்ளும் பயணம் எதிர்பார்த்ததை விட அதிக பலனளிக்கும் மற்றும் லாபகரமானதாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் மக்களிடம் பேசும்போதும், பழகும்போதும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பழைய நோய்கள் மீண்டும் தோன்றும் அபாயம் உள்ளது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

