Latest Updates
-
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வங்கி எது? அதன் பெயர் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 நாள் குடிங்க.. உடல் எடை, பிபி, சுகர் எல்லாம் தானா குறையும்.. -
நவம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
டிசம்பர் 05-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி - இந்த 3 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியப்போகுது.. -
December 2026 Horoscope: டிசம்பர் மாதத்தில் தோல்விகளால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பன்னீர் யாக்னி - இதுக்கு வெங்காயம் தக்காளியே தேவைப்படாது.. எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கர்நாடகா ஸ்டைல் பூரி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வழக்கத்தை விட வீட்ல எல்லாரும் அதிகமா சாப்பிடுவாங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. டிசம்பர் மாசம் எப்படி இருக்கும்ன்னு சொல்றோம்... -
இந்த 5 ராசி ஆண்கள் சரியான 'அம்மா பிள்ளையாக' இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த பொருட்களை மிக்சி ஜாரில் தெரியாம கூட அரைச்சுராதீங்க - இல்லனா மிக்சி வீணாப்போயிரும்
தாபா ஸ்டைல் மட்டர் பன்னீர் ரெசிபி - இந்த பக்குவத்துல பன்னீரை செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு செமையா இருக்கும்
Dhaba Style Mutter Paneer Recipe in Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பன்னீர் என்றால் ரொம்ப பிடிக்குமா? அதனால் அடிக்கடி பன்னீரை செய்வீர்களா? அதுவும் வீட்டில் சப்பாத்தி செய்தால் எப்போதும் பன்னீரை தான் சைடிஷ்ஷாக செய்வீர்களா? பன்னீரை எப்போதும் ஒரே சுவையில் தான் செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை அதை பட்டாணியுடன் சேர்த்து நார்த் இந்தியன் ஸ்டைல் மட்டர் பன்னீர் கிரேவியை செய்யுங்கள்.

பொதுவாக குழந்தைகளின் வளர்ச்சிக்கு பால் பொருட்கள் மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் அவற்றில் தான் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் பால் பொருட்களிலேயே குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடக்கூடியது பன்னீரைத் தான். பால் குடிக்காத குழந்தைகள் கூட பன்னீரை விரும்பி சாப்பிடுவார்கள். அத்தகைய பன்னீரை எப்போதும் ஒரே மாதிரி செய்யாமல், அவ்வப்போது வித்தியாசமான சுவையில் செய்து கொடுத்தால், வழக்கமாக சாப்பிடுவதை விட சற்று அதிகமாக சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு தாபா ஸ்டைல் மட்டர் பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டர் பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- பச்சை பட்டாணி [வேகவைத்தது] - 1 கப்
- பன்னீர் - 1 கப் [½ இன்ச் துண்டுகளாக நறுக்கி, வறுத்தது]
- பெரிய வெங்காயம் - 1 [
- பச்சை மிளகாய் - 1
- இஞ்சி-பூண்டு விழுது - 2 ஸ்பூன்
- முந்திரி விழுது - ¼ கப்
- தக்காளி விழுது - 1 கப்
- தயிர்- ¼ கப்
- சீரகத் தூள் - 1 ஸ்பூன்
- மல்லித் தூள் - 1 ஸ்பூன்
- மிளகுத் தூள் - ½ ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
- கசூரி மேத்தி - 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் - ½ ஸ்பூன்
- மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
- ஏலக்காய் தூள் - ½ ஸ்பூன்
- தேவையான அளவு உப்பு
- நறுக்கிய கொத்தமல்லி இலைகள் - 1 ஸ்பூன்
- எண்ணெய் + நெய் - 3 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி அதில் நறுக்கிய பன்னீரை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும்.
- அதேபோல பட்டாணியை 8 மணி நேரம் ஊற வைத்து அதை வேக வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் மற்றும் நெய்யைச் சூடாக்கி, அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின்னர் இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து வேகவிடவும்.
- தக்காளி பச்சை வாசனை போனதும் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் முந்திரி விழுதைச் சேர்த்து நன்கு கலக்கவும். அதன் பிறகு சீரகத் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும்.
- அதன்பின் வேக வைத்த பச்சை பட்டாணி மற்றும் தயிர் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- அதன்பின் வறுத்த பன்னீரைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- 2 நிமிடம் பன்னீரை வேக வைத்து பின்னர் கசூரி மேத்தி மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- அடுப்பை அணைத்துவிடவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவி, சூடாகப் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
