Latest Updates
-
குருபகவானின் வக்ர பெயர்ச்சியால் கோடி நன்மைகளை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முட்டை தேங்காய் குழம்பை ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல சூப்பரா இருக்கும் -
வார ராசிபலன் ( November 29-டிசம்பர் 05)- இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
இந்தியாவிலேயே அதிக குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
காரசாரமான ஹைதராபாத் சிக்கன் கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தரமான டேஸ்ட்ல இருக்கும் -
சனிபகவானால் டிசம்பர் 11 முதல் கஷ்டங்களை அனுபவிக்கபோகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
தாபா ஸ்டைல் மட்டர் பன்னீர் ரெசிபி - இந்த பக்குவத்துல பன்னீரை செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் வங்கி எது? அதன் பெயர் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 நாள் குடிங்க.. உடல் எடை, பிபி, சுகர் எல்லாம் தானா குறையும்.. -
நவம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஏமாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்
நவம்பர் 29, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கசப்பான அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் தேதி ஞாயிறுக் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
மேஷம்
இன்று உங்கள் திருமண வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணை சிறு விஷயங்களுக்காக உங்களுடன் கோபப்படலாம். உங்கள் துணையை அன்புடன் சமாதானப்படுத்த முயற்சித்தால் நல்லது. பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். இன்று நீங்கள் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். வேலையில் சற்று பரபரப்பாக இருப்பீர்கள். இருப்பினும், உங்கள் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் உதவியுடன், எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். நாளின் இரண்டாம் பகுதியில் திடீர் உடல்நலக் கோளாறுகள் வரலாம்.
ரிஷபம்
இன்று உங்களுக்கு மிகவும் இனிமையான நாளாக இருக்கும். நீங்கள் யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், அதை திரும்பப் பெற வலுவான வாய்ப்புள்ளது. உங்கள் நிதி பிரச்சனையும் தீர்க்கப்படும். வேலை தொடர்பான புதிய முயற்சி வெற்றியடையும். நீங்கள் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தால், பதவி உயர்வு பெற வலுவான வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். விரைவில் உங்கள் வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி நடைபெற வாய்ப்புள்ளது.
மிதுனம்
இன்று உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் சிரமப்படுவீர்கள். வியாபாரிகள் மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் தங்கள் வணிக முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். குறிப்பாக முதலீடு தொடர்பான விஷயங்களில் சுயமாக யோசிக்க வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு சாதாரண நாளாக இருக்கும். எந்த விதமான மாற்றத்தைப் பற் யோசிப்பதையும் தவிர்க்கவும். நிதி நிலையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
கடகம்
இன்று தொழிலதிபர்களுக்கு இன்று பாதகமாக சூழல் நிலவக்கூடும். இன்று உங்களுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று சாதாரண நாளாக இருக்கும். பதவி உயர்வை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அலுவலகத்தில் உங்கள் நடத்தையை கவனித்துக்கொள்ளவும். இன்று பண விஷயத்தில் கலவையான பலன்கள் உண்டாகும். இன்று நீங்கள் கடன் பரிவர்த்தனைகளைத் தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
சிம்மம்
இன்று சிம்ம ராசி வணிகர்களுக்கு இன்று எதிர்பார்த்த அளவு சிறப்பாக இருக்காது. ஆனால், நாளின் இரண்டாம் பாதியில் திடீரென்று உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் அதிகம் கேலி செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்காதீர்கள். இல்லையெனில், அது உங்களுக்குள் மனகசப்பை ஏற்படுத்தும். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்யாதீர்கள்.
கன்னி
இன்று மற்றவர்களின் வார்த்தைகளைக் கேட்டு முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் ஆடம்பர செலவுகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். வணிகர்கள் சில புதிய நட்புகளைப் பெறலாம். இது எதிர்காலத்தில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் செயல்திறனில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சில சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் வீண் அலைச்சல் இருக்கும்.
துலாம்
இன்று சில கசப்பான அனுபவங்களை சந்திக்க நேரிடலாம். வாழ்க்கையின் ஏற்ற தாழ்வுகளுக்கு பயப்படுவதற்குப் பதிலாக, உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். தொழிலதிபர்களின் வருமானம் அதிகரிப்பதால் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இன்று உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். நீங்கள் வெளியூர் சென்று தொழில் செய்ய நினைத்தால், தடைகள் அனைத்தும் தீரும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்லுறவு இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடனான உறவு மோசமடையக்கூடும்.
விருச்சிகம்
இன்றைய நாளின் ஆரம்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று உங்களுக்குள் ஒரு புதிய ஆற்றலை உணர்வீர்கள். வேலை தொடர்பான கவலைகள் நீங்கி நல்ல மனநிலையில் இருப்பீர்கள். தொழிலதிபர்களின் நிதி நிலை வலுவடையும். கூட்டு வணிகம் செய்வது உங்களுக்கு நன்மை பயக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று தங்கள் கடின உழைப்பிற்கான பலனை அடைவார்கள். நிதி நிலைமை கணிசமாக மேம்படும். தேவையற்ற மோதல்களைத் தவிர்த்து, கடினமான சூழ்நிலைகளில் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால், ஏதேனும் அசம்பாவிதங்களைத் தவிர்க்க மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்டுங்கள். குடும்பத்தில் தகராறுகள் அதிகரிக்கக்கூடும், இது உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நிதிரீதியாக இன்று சாதகமான நாளாக இருக்கும். எந்தவொரு முடிவையும் பதட்டத்தில் எடுப்பதைதத் தவிர்க்க வேண்டும். வேலையில் மாற்றங்களைக் கொண்டுவர எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள்தேடி வரும். இருப்பினும், சிறிய விஷயங்களுக்காக அதிகம் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் அலுவலகப் பணிகளை கவனமாக செய்ய வேண்டியது அவசியம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று பல சவால்களை சந்திக்க நேரிடும். உங்கள் நேரத்தை வீணாக்குவதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது அதிக பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். வேலை தேடும் இளைஞர்களுக்கு சில நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். பண விஷயங்களில் கவனம் செலுத்துவதும், உங்கள் பொறுப்புகளை புறக்கணிக்காமல் இருப்பதும் மிக முக்கியம். சில முக்கியமான நபர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உருவாகலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று தங்கள் அதிகரித்து வரும் செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்துவார்கள். உங்கள் வருமானம் அதிகரிக்கும் என்றாலும், அது கூடுதல் சவால்களைக் கொண்டுவரக்கூடும். குடும்பத்தில் ஒரு சுப நிகழ்வு ஏற்பாடு செய்யப்படலாம். நிதி பரிவர்த்தனைகளை கூட்டு முயற்சியுடன் கையாள வேண்டும். உடல் ஆரோக்கிய பிரச்சினைகளைப் புறக்கணிப்பது சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
