Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்!

Krishna Jayanthi 2026: பகவான் கிருஷ்ணர் ஆவணி மாத அஷ்டமி திதி மற்றும் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியானது ஆவணி மாத அஷ்டமி திதியைப் பொறுத்து மாறுபடும். அந்த வகையில் இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04 ஆம் தேதி, அதாவது இன்று கொண்டாடப்படுகிறது.

Krishna Jayanthi 2026 Best Offerings For Lord Krishna As Per Your Zodiac Sign

இருப்பினும் இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி மிகவும் விஷேசமானது. ஏனெனில் இந்த ஆண்டு அஷ்டமி திதியும், ரோகிணி நட்சத்திரமும் ஒரே நாளில் வருகின்றன. பெரும்பாலும் இப்படியான சேர்க்கை அரிதாகவே நிகழும். இப்படிப்பட்ட விஷேசமான கிருஷ்ண ஜெயந்தி நாளன்று பக்தர்கள் கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை படைத்து பூஜைகளை செய்து சிறப்பு வழிபாடு செய்வார்கள்.

பெரும்பாலும் கிருஷ்ணருக்கு லட்டு, வெண்ணெய், அவல், பழங்கள், பால் சார்ந்த ஸ்வீட் போன்றவற்றை படைத்து வழிபடுவார்கள். நீங்கள் கிருஷ்ணரின் பரிபூர்ண அருளை பெற விரும்பினால், உங்கள் ராசிக்கேற்ப கிருஷ்ண ஜெயந்தி நாளில் வழிபாடு செய்யலாம். இப்போது கிருஷ்ண ஜெயந்தி நாளில் எந்த ராசிக்காரர்கள் எதை படைத்து வழிபாடு செய்யலாம் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு பாலால் அபிஷேகம் செய்து, சிவப்பு ரோஜாப்பூக்களை படைக்கலாம். அதோடு வாழ்வில் மகிழ்ச்சி பெருக வெண்ணெய் மற்றும் கற்கண்டை கிருஷ்ணருக்கு நிவேத்தியமாக படைத்து வழிபாடு செய்யலாம்.

ரிஷபம்

ரிஷப ராசியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணருக்கு தயிர் மற்றும் பஞ்சாதமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்து, மல்லிகைப்பூ மற்றும் தாமரை விதை பாயாசத்தை படைத்து வழிபாடு செய்யலாம். இது மன அமைதியைத் தருவதோடு, நிதி நிலையையும் வலுப்படுத்தும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் கிருஷ்ணருக்கு ஒரு மயிலிறகை கிருஷ்ணரின் மகுடத்தில் சூட்டி, துளசி, பச்சை நிற பழங்கள், வெண்ணெய் போன்றவற்றை படைத்து வழிபடலாம். இது பேச்சில் இனிமையைக் கொண்டு வருவதோடு, தொழிலில் நல்ல வெற்றியைப் பெற்றுத் தரும்.

கடகம்

கடக ராசியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ண பகவானுக்கு பசும்பாலால் அபிஷேகம் செய்து, வெள்ளை தாமரை மற்றும் வெண்ணெய், கற்கண்டை படைத்து வழிபாடு செய்யலாம். இது குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளைக் குறைத்து, வாழ்வில் சந்தோஷத்தையும், அமைதியையும் கொண்டு வரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் கிருஷ்ணரின் ஆசியைப் பெற ரோஸ் வாட்டர் மற்றும் குங்குமப்பூ கலந்த பாலை படைத்து வழிபாடு செய்யலாம். மேலும் தாமரை, சிவப்பு நிற ஆடைகள் போன்றவற்றையும் கிருஷ்ணருக்கு படைக்கலாம். இது சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதையை அதிகரிக்கும்.

கன்னி

கன்னி ராசியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளன்று மயில் இறகுகளையும், துளசி இலைகளையும் படைக்கலாம். அதோடு பச்சை நிற ஆடைகள், வெண்ணெய், கற்கண்டு போன்றவற்றையும் படைத்து வழிபடலாம். இது அறிவுத்திறனை மேம்படுத்துவதோடு, முடிக்க முடியாமல் இருக்கும் வேலைகளும் வெற்றிகரமாக முடிவடையும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளன்று கிருஷ்ணருக்கு தயிர் மற்றும் தேனைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம். மேலும் வெள்ளை நிற பூக்கள் மற்றும் வெண்ணெய், கற்கண்டு, மாவா லட்டுக்களையும் படைத்து வழிபடலாம். இதனால் திருமண வாழ்க்கையில் சந்தோஷம் பெருகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் பால் மற்றும் தேனைக் கொண்டு கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்து, சிவப்பு நிற பூக்கள் மற்றும் தாமரை விதை பாயாசத்தை படைத்து வழிபாடு செய்யலாம். இது எதிரிகளை வென்று வீழ்த்தவும், நல்ல ஆரோக்கியத்தையும் கிடைக்கச் செய்யும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளன்று கிருஷ்ணருக்கு மஞ்சள் சந்தனம், மஞ்சள் நிற சாமந்தி மற்றும் மஞ்சள் நிற பூக்களை படைக்கலாம். அதோடு குங்குமப்பூ கலந்த பாயாசம் அல்லது கடலை மாவு லட்டுக்களை படைத்து வழிபாடு செய்யலாம். இது வாழ்வில் நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.

மகரம்

மகர ராசியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணருக்கு கங்கை நீர் மற்றும் தயிரைக் கொண்டு அபிஷேகம் செய்து, நீலம் அல்லது ஊதா நிற பூக்கள், உலர் பழங்களை படைத்து வழிபாடு செய்யலாம். இது சனியின் அருளைப் பெற உதவுவதோடு, அனைத்து கஷ்டங்களில் இருந்தும் நிவாரணத்தை அளிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் கிருஷ்ண ஜெயந்தி நாளன்று காய்ச்சாத பச்சை பாலில் கருப்பு எள்ளு விதைகளை கலந்து கிருஷ்ணருக்கு அபிஷேகம் செய்து, நீல நிற பூக்கள் மற்றும் வெண்ணெய், கற்கண்டை நிவேத்தியமாக படைத்து வழிபடலாம். இது வாழ்வில் நல்ல நிதி தொடர்பான தடைகளை அகற்றும்.

மீனம்

மீன ராசியைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு குங்குமப்பூ பாலால் அபிஷேகம் செய்து, மயிலிறகால் மகுடத்தை அலங்கரித்து கிருஷ்ணருக்கு சூட்டி, மஞ்சள் நிற பூக்கள் மற்றும் வெண்ணெயை படைத்து வழிபாடு செய்யலாம். இது வாழ்வில் சந்தோஷத்தையும், செழிப்பையும் கொண்டு வரும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Friday, September 4, 2026, 8:52 [IST]
Desktop Bottom Promotion