Latest Updates
-
Ayudha Pooja 2026: ஆயுத பூஜை ஏன் கொண்டாடப்படுகிறது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? -
வெள்ளை நிற ஆடையில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான்
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க..
Krishna Jayanthi Aval Payasam Recipe in Tamil: கிருஷ்ண ஜெயந்தி நாளில் உங்கள் வீட்டில் பலவிதமான பலகாரங்களை செய்து கிருஷ்ணருக்கு படைத்து வழிபடும் வழக்கம் உள்ளதா? முக்கியமாக கிருஷ்ணருக்கு பால் பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய பலகாரங்கள் ரொம்ப பிடிக்கும் என்பதால், பால் பொருட்களை கொண்டு நிறைய பலகாரங்களை செய்து பலர் படைத்து வழிபடுவார்கள்.

பொதுவாக ஒரு விஷேச தினம் என்றால் நிச்சயம் வீட்டில் பாயாசம் செய்வோம். அப்படி கிருஷ்ண ஜெயந்திக்கும் பாயாசம் செய்வதாக இருந்தால் வழக்கமாக செய்யும் பாயாசத்தை செய்யாமல், அவல் கொண்டு பாயாசம் செய்யுங்கள். இந்த பாயாசம் நன்கு சுவையாக இருப்பதோடு, க்ரீமியாகவும் இருக்கும்.
உங்களுக்கு இந்த அவல் பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் பாயாசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சிவப்பு கெட்டி அவல் - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - சிறிது
* காய்ச்சிய பால் - 4 கப் அல்லது 1 லிட்டர்
* ஏலக்காய் - 3
* பொடித்த வெல்லம் - 1 கப்
* முந்திரி - சிறிது
* உலர் திராட்சை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடானதும், 1 கப் சிவப்பு கெட்டி அவலை சேர்த்து பொன்னிறமாக
வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் 1/2 கப் பாசிப்பருப்பை கழுவி சேர்த்து,
பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு குக்கரில் வறுத்த பாசிப்பருப்பை சேர்த்து, அதில் சிறிது நீரை
ஊற்றி குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்க
வேண்டும். வி
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதை ஒரு வாணலியில் எடுத்து
கொண்டு, அதில் வறுத்த அவலை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி விட
வேண்டும்.
* அதன் பின் அதில் 4 கப் காய்ச்சிய பாலை ஊற்றி, 3 ஏலக்காயை இடித்து
சேர்த்து கிளறி, மூடி வைத்து 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அவல் வெந்ததும், அதை இறக்கி, அத்துடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து
நன்கு கிளறி, மீண்டும் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, கொதி வர
ஆரம்பித்ததும், அதை இறக்கிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், முந்திரி, உலர் திராட்சை சேர்த்து வறுத்து இறக்கி,
பாயாசத்துடன் சேர்த்து கிளறினால், சுவையான மற்றும் க்ரீமியான அவல்
பாயாசம் தயார்.



Click it and Unblock the Notifications
