கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்

Foot Symptoms: நமது உடல் ஆரோக்கியத்தில் பாதங்களுக்கும் முக்கிய பங்கு உள்ளது. அதுவும் நடப்பது, நிற்பது போன்ற செயல்களில் ஈடுபடும் பாதங்களில் வலி, வீக்கம், மரத்துப் போவது, தோல் நிற மாற்றம், எரிச்சல் போன்ற பிரச்சனை அடிக்கடி சந்திக்க நேரிடும். இப்படி பாதங்களில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு பின் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். சில சமயங்களில் நமது உடலில் உள்ள குறிப்பிட்ட பிரச்சனைகளை உணர்த்தும் வகையில் பாதங்களில் இப்படியான அறிகுறிகள் தெரியலாம்.

Health Coach Reveals Common Foot Symptoms and What They Mean

இப்படி தொடர்ந்து பாதங்களில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இதுக்குறித்து ஹெல்த் கோச்சான சருல் ஜெயின் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பாதங்களில் சந்திக்கும் பிரச்சனைகளும், அவை உடலில் எந்த பிரச்சனையைக் குறிக்கலாம் என்பது குறித்தும் பகிர்ந்துள்ளார். அது என்னவென்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

கால் வீக்கம்

அடிக்கடி கால்களில் வீக்கம் ஏற்படுகிறதா? அப்படியென்றால், இரத்த சர்க்கரை அளவு அதிகம் இருக்க வாய்ப்புள்ளது என்று கோச் கூறியிருந்தார். இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது, அது தமனிகளை இறுக்கமாக்கி, மிகச்சிறிய இரத்த நாளங்களை வலுவிழக்கச் செய்கிறது. இதனால் அவை கசியும் தன்மை கொண்டவையாக மாறி, கால்களின் கீழ்ப்பகுதியில் திரவம் தேங்க வழிவகுக்கிறது.

பாத அரிப்பு

பாதங்களில் கடுமையான அரிப்பை சந்திக்கிறீர்களா? அப்படியானால் கல்லீரலில் பிரச்சனை இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம் என்று கோச் கூறினார். கல்லீரலில் பிரச்சனை இருக்கும் போது இரத்தத்தில் பித்த உப்புக்களின் அளவு அதிகரித்து, அதன் விளைவாக பாதங்கள் அல்லது உடலின் எந்த பகுதியிலும் கடுமையான அரிப்புக்களை ஏப்டுத்தலாம்.

நகங்களில் பூஞ்சை தொற்று

கால் விரல் நகங்களில் பூஞ்சை தொற்றுகள் ஏற்படுகிறதா? அப்படியென்றால் குடலில் தீவிர பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது என்று கோச் கூறினார். ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்கள் தான் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நகப் பூஞ்சை போன்ற வெளிப்புறப் பூஞ்சைத் தொற்றுகளை எதிர்த்துப் போராட உடலுக்கு உதவுகிறது.

குதிகால் வலி

குதிகால்களில் வலியை சந்திக்கிறீர்களா? அப்படியெனில் உடலில் வைட்டமின் டி குறைபாடு இருக்கலாம் என்று கோச் கூறினார். உடலில் வைட்டமின் டி குறைவாக இருந்தால், அது கால்சியம் உறிஞ்சுதலைக் குறைத்து, எலும்புகளை மென்மையாக்கி அல்லது பலவீனமடையச் செய்து, சிறிது நேரம் நின்றாலோ அல்லது நடந்தாலோ குதிகால்களில் வலியை உண்டாக்கலாம்.

கால்களில் பிடிப்பு

கால்களில் அடிக்கடி பிடிப்புகளை சந்திக்கிறீர்களா? அப்படியென்றால் உடலில் மக்னீசியம் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புள்ளது என்று ஹெல்த் கோச் கூறினார்.

கால் மரத்துப்போவது

கால்கள் அடிக்கடி மரத்துப் போகிறதா? எப்போது உடலில் வைட்டமின் பி1 குறைபாடு உள்ளதோ, அப்போது கால்கள் மரத்துப் போகும் என்று கோச் கூறினார். வைட்டமின் பி1 என்னும் தயாமின் உடலில் குறைவாக இருந்தால், அது புற நரம்புகளை சேதப்படுத்தி, புற நரம்பியல் நோய்க்கு வழிவகுத்துவிடும்.

குதிகால் வெடிப்பு

திடீரென்று குதிகால் வெடிப்பு உங்களுக்கு அதிகமாக வருவதை காண்கிறீர்களா? அப்படியென்றால் உடலில் வைட்டமின் பி2 குறைபாடு இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என்று ஹெல்த் கோச் கூறினார். வைட்டமின் பி2 என்னும் ரிபோஃப்ளேவின் உடலில் குறைவாக இருக்கும் போது, அது குதிகால்களில் வறட்சி, வெடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த பி வைட்டமின்கள் செல் சீரமைப்புக்கும் சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் இன்றியமையாதவை.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, September 3, 2026, 13:25 [IST]
Desktop Bottom Promotion