Latest Updates
-
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
Krishna Jayanthi Special Poori Payasam Recipe in Tamil: இந்துக்களின் முக்கியப் பண்டிகையான கிருஷ்ண ஜென்மாஷ்டமி வரப்போகிறது. இந்த வருட கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் சிறப்பு உணவுகள் தயாரித்து, விரதமிருந்து கிருஷ்ணரை வழிபடுகிறார்கள். பொதுவாக இந்த நாளில் சீடை, வெண்ணெய், வடை மற்றும் வேறுசில இனிப்புகளை செய்து கிருஷ்ணரை வழிபடுவார்கள். ஆனால் இந்த வருடம் வழக்கமான இனிப்பு இல்லாமல் ஒரு வித்தியாசமான இனிப்பை செய்து கிருஷ்ணரை வழிபட விரும்புகிறீர்களா?

அப்படியென்றால் இந்த பூரி பாயாசத்தை செய்து பாருங்கள். இந்த பூரி பாயாசம் அனைவரும் விரும்பும் சுவையில் அட்டகாசமாக இருக்கும். உங்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூரி பாயாச ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- ரவை - 1 கப்
- நெய் - 1 டீஸ்பூன்
- பால் - 2 - 3 டேபிள் ஸ்பூன் (பூரி செய்ய)
- சர்க்கரை - ஒரு சிட்டிகை
- உப்பு - ஒரு சிட்டிகை
- தண்ணீர் - 1/2 கப்
- பாதம் விழுது - 1/2 கப்
- சர்க்கரை - 7 டேபிள் ஸ்பூன்
- பால் - அரை லிட்டர் (பாதம் கீர் செய்ய)
- குங்குமப்பூ கலந்த பால் - 2 டீஸ்பூன்
செய்முறை:
- ரவையுடன் நெய், 2 ஸ்பூன் பால், ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சர்க்கரையை சேர்க்கவும்.
- நன்றாகக் கலந்து 10 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் இந்த மாவைச் சேர்த்து மென்மையாகும் வரை அரைக்கவும்.
- மாவு பூரி போல இறுக்கமாக இருக்க வேண்டும்.
- சிறிய உருண்டைகளாக உருட்டி, பூரி போல தட்டையாக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு ஆழமான பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி ஒவ்வொரு பூரியாக பொரித்தெடுக்கவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றவும்.
- தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அரைத்த பாதாம் விழுதைச் சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
- சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலந்து, பின்னர் ஊறவைத்த குங்குமப்பூ பாலை சேர்க்கவும்.
- நன்கு கொதித்ததும் அடுப்பை அணைக்கவும்.
- பின்னர் பூரிகளை நொறுக்கி இதில் போட்டு ஊற வைக்கவும்.
- இதை சூடாகவோ அல்லது கூலிங்காகவோ பரிமாறவும்.



Click it and Unblock the Notifications