Latest Updates
-
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா?
உலகின் அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக சொல்லபோனால் சில துறைகளில் ஆண்களை விட பெண்களே அதிகம் கோலோச்சுகின்ற்னர். இதற்கு இராணுவமும் விதிவிலக்கல்ல. உலகில் பெண் படைவீரர்கள் மற்றும் பெண் அதிகாரிகள் இல்லாத இராணுவம் என்று எதுவும் கிட்டத்தட்ட இல்லை என்றே கூறலாம். அனைத்து நாடுகளின் இராணுவத்திலும் சாதாரண படைவீரராக தொடங்கி உயரிய பொறுப்புகள் வரை பல்வேறு பதவிகளில் பெண்கள் உள்ளனர்.

ஆனால், எந்த நாட்டின் இராணுவத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் உள்ளனர் என்பதையும், இதில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதையும் நீங்கள் எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
எந்த நாட்டு இராணுவத்தில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் உள்ளனர்?
உலகின் மிகவும் வலிமையான இராணுவத்தைக் கொண்ட அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளின் இராணுவத்தில் அதிகளவிலான பெண்கள் இல்லை. ஆனால் ஆச்சரியப்படுத்தும் விதமாக, 'பூமியின் நரகம்' என்று அழைக்கப்படும் ஒரு சர்வாதிகார நாடாகத் திகழும் வட கொரியா, தனது ஆயுதப் படைகளில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பணியாற்றும் சிறப்பைப் பெற்றுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் போன்ற மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில், வட கொரிய ராணுவத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான பெண் வீரர்கள் உள்ளனர்.
அடுத்தடுத்த இடங்களில் உள்ள நாடுகள் என்னென்ன?
வட கொரியாவைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா, மால்டோவா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகள் தங்கள் இராணுவத்தில் அதிக அளவில் பெண்களைக் கொண்ட நாடுகளாகத் திகழ்கின்றன என்று தரவுகள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்காவின் இராணுவத்தில் பெண்கள் 24 சதவீதமாகவும், மால்டோவா மற்றும் ஹங்கேரியில் சுமார் 20 சதவீதமாகவும் உள்ளனர். ஆஸ்திரேலியா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளின் ராணுவத்தில் சுமார் 19 சதவீதமும், நியூசிலாந்து ராணுவத்தில் 18 சதவீதமும், அமெரிக்க ராணுவத்தில் 17 சதவீதமும் பெண் வீரர்கள் உள்ளனர். உக்ரைன் இராணுவத்தில் 70,000-க்கும் மேற்பட்ட பெண் வீரர்கள் உள்ளனர்.
இந்தியா எந்த இடத்தில் உள்ளது?
சமீபத்திய தரவுகளின்படி, இந்திய ராணுவத்தில் பெண்களின் எண்ணிக்கை நிதானமான வேகத்தில் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தியாவின் ஆயுதப்படைகளில் சுமார் 6% முதல் 7% வரை பெண் அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். அதாவது கிட்டதட்ட 7,000 பெண் படை வீரர்கள் இந்திய இராணுவத்தில் பல்வேறு பதவிகளில் இருக்கின்றனர். தற்போது இந்திய ராணுவத்தில் 7,000-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் உள்ளனர். இதில் இந்திய விமானப்படையில் 1,636 பேரும், கடற்படையில் 748 பேரும் பணியாற்றுகின்றனர்.
2023-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, இந்திய ராணுவத்தில் 7,000-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் பெரும்பாலோர் நிரந்தர அதிகாரிகளாக பணியமர்த்தப்பட்டுள்ளனர், அதேவேளையில் மற்றவர்கள் மத்திய அரசின் 'அக்னிபாத்' திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் இராணுவத்தில் பெண்கள் பணியாற்றுகிறார்களா?
1947-இல் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதிலிருந்து பாகிஸ்தான் இராணுவத்தில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, பாகிஸ்தானிய ஆயுதப் படைகளில் 4,000-க்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் உள்ளனர்.



Click it and Unblock the Notifications

