இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க

இந்தியா என்னும் மாபெரும் நிலப்பரப்பையும், 140 கோடி மக்கள் தொகையையும் நிர்வகிக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் முதலமைச்சராலும், இந்திய ஒன்றியத்தின் பிரதம அமைச்சராக பிரதமரும், அனைத்திற்கும் மேலாக முப்படைகளின் தளபதியாக மற்றும் இந்தியாவின் முதல் குடிமகனாக ஜனாதிபதி உள்ளார்.

Salaries Of Indian President Vice President Prime Minister MPs Chief Ministers

இந்த பதவிகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் பதவி வகித்தாலும் இந்த மக்கள் சேவைக்கு அவர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது. உண்மையில் சொல்லப்போனால் இந்தியாவின் மிக உயரிய பதவிகளில் உள்ளவர்களுக்கு ஒரு சர்வதேச கம்பெனியின் நிர்வாகப் பதவிகளில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட குறைவாகவே வழங்கப்படுகிறது. இந்த பதிவில் இந்தியாவின் மிக உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் சலுகைகள் எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம்.

ஜனாதிபதியின் சம்பளம்

இந்தியாவின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தளபதியாக பதவி வகிக்கும் குடியரசுத் தலைவர் இந்திய அரசியலமைப்பில் அதிகபட்ச சம்பளத்தை பெறும் நபராக உள்ளார். கடந்த காலங்களில் 1.50 லட்சமாக இருந்த ஜனாதிபதியின் சம்பளம் 2018 ஆம் ஆண்டு 5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்தியக் குடியரசுத் தலைவர் அதிக ஊதியம் பெறும் அரசு அதிகாரி ஆவார். வரி விலக்குடன் கூடுதலாக, அவருக்கு ரயில் அல்லது விமானம் மூலம் உலகம் முழுவதும் இலவசமாகப் பயணம் செய்யும் வசதி, அனைத்து வசதிகளுடன் கூடிய அதிகாரப்பூர்வ இல்லம், மருத்துவ வசதி மற்றும் ஆண்டுதோறும் 1 லட்சம் ரூபாய் அலுவலகச் செலவுக்கான படி ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன. பதவிக்காலம் முடிந்த பிறகு, அவருக்கு மாதம் 1.5 லட்சம் ரூபாய் ஓய்வூதியம், வாடகையில்லாத குடியிருப்பு வசதி, ஒரு துணையுடன் இலவசப் பயணம் மற்றும் தொடர்ந்து பணியாளர் உதவியைப் பெறும் சலுகை ஆகியவை வழங்கப்படுகின்றன.

துணை குடியரசு தலைவரின் சம்பளம்

இந்தியாவில் துணை ஜனாதிபதி பதவி இரண்டாவது மிக உயர்ந்த அரசியலமைப்புப் பதவியாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு அதே பட்ஜெட்டில், துணை ஜனாதிபதிக்கான ஊதியம் மாதம் ரூ. 1.25 லட்சத்திலிருந்து ரூ. 4 லட்சமாக உயர்த்தப்பட்டது. துணை ஜனாதிபதிக்கு இலவச தங்குமிடம், தனிப்பட்ட பாதுகாப்பு, மருத்துவ வசதி, ரயில் மற்றும் விமானப் பயண வசதி, தரைவழித் தொலைபேசி இணைப்பு, அலைபேசி சேவை மற்றும் உதவியாளர் சேவைகள் வழங்கப்படுகின்றன. துணை ஜனாதிபதி ஓய்வுபெற்ற பிறகு, அவருக்கு ஒரு தனிச் செயலாளர், கூடுதல் தனிச் செயலாளர், தனிப்பட்ட உதவியாளர் மற்றும் இரண்டு அலுவலக உதவியாளர்கள் அடங்கிய செயலகப் பணியாளர்கள் வழங்கப்படுவார்கள்.

பிரதமரின் சம்பளம்

இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சராக உள்ள பிரதமர் மாதந்தோறும் சுமார் ரூ. 2.80 லட்சம் ஊதியம் பெறுகிறார். இதில் ரூ. 50,000 அடிப்படை ஊதியம், ரூ. 3,000 செலவுப்படி, ரூ. 45,000 நாடாளுமன்றப் படி மற்றும் ரூ. 62,000 தினசரிப் படி ஆகியவை அடங்கும். பிரதமருக்கு வழங்கப்படும் சலுகைகள் என்னவெனில், அவரது பாதுகாப்பிற்கான தனிப்பட்ட பணியாளர்கள் மற்றும் சிறப்புப் பாதுகாப்புக் குழு(SPG), அலுவல்ரீதியான பயணங்களுக்கான பிரத்யேக விமானம் - 'ஏர் இந்தியா ஒன்' மற்றும் ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் பணியாளர்கள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.

முதலமைச்சர்களின் சம்பளம்

இந்தியாவில் மாநிலங்களுக்கு ஏற்ப முதலமைச்சர்களின் ஊதியம் மாறுபடுகிறது. இது பொதுவாக மாதம் ரூ. 1.25 லட்சம் முதல் ரூ. 4.10 லட்சம் வரை உள்ளது. இதில் அதிகபட்சமாக தெலங்கானா மாநில முதல்வர் 4.10 லட்சம் சம்பளமாகப் பெறுகிறார், அதேசமயம் திரிபுரா மாநில முதலமைச்சர் ரூ. 1.05 லட்சம் சம்பளமாகப் பெறுகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் 2.05 லட்சம் மாத சம்பளமாகப் பெறுகிறார். இந்த அடிப்படை ஊதியத்துடன், குடியிருப்பு, பயணம் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பல்வேறு படிகளும் சலுகைகளும் கூடுதலாக வழங்கப்படுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம்

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவையில் தனது தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதம் 1.24 லட்சம் ரூபாய் ஊதியம் பெறுகின்றனர். நாடாளுமன்றக் கூட்டங்கள் மற்றும் குழுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான தினசரிப்படி 2,000 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகுதிப் படியாக மாதம் 45,000 ரூபாயும், அலுவலகச் செலவுப் படியாக 45,000 ரூபாயும் பெறுகின்றனர். இது தவிர, சாலை வழிப் பயணங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 16 ரூபாய் பயணப்படியாகப் பெறும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.

சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம்

சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. இதில் அதிகபட்சமாக தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 2.50 லட்சம் மாத சம்பளமாக வழங்கப்படுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற இருபினர்களுக்கு 1.05 லட்சம் அடிப்படை ஊதியமாக வழங்கப்படுகிறது.

Desktop Bottom Promotion