Latest Updates
-
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம்
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது!
Mars Nakshatra Transit On 02 September 2026: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார் மற்றும் இவர் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுவார். தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாயின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அந்த வகையில் செவ்வாய் செப்டம்பர் 02 ஆம் தேதி நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது செவ்வாய் புனர்பூசம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இந்த புனர்பூசம் நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான் ஆவார். செவ்வாய் குரு பகவானின் நட்சத்திரத்திற்குள் செல்வதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும்.
முக்கியமாக தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும், வியாபாரத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். இப்போது செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலன் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு தங்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். முக்கியமாக ஒவ்வொரு முயற்சியிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
கன்னி
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் மூலம் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த வேலை கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறும் வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கலாம். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகரம்
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சியானது மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது. அதுவும் நீண்ட காலமாக தொடங்க முடியாமல் நிலுவையில் உள்ள வேலையை வெற்றிகரமாக தொடங்குவீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டிருந்த வேலை வெற்றிகரமாக முடிவுக்கு வருவதோடு, நல்ல லாபத்தையும் தரும். செவ்வாயின் அருளால் தொழில் மற்றும் நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



