Latest Updates
-
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்!
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..
Benefits Of Burning Camphor And Bay Leaves Together: நம் வீட்டு சமையலறையில் மருத்துவ குணம் வாய்ந்த பொருட்கள் ஏராளம் உள்ளன. அதில் ஒன்று தான் பிரியாணி இலை. உணவிற்கு நல்ல மணத்தைத் தரும் பிரியாணி இலையானது, நிறைய மருத்துவ பண்புகளைக் கொண்டது. அதேப் போல் நம் வீட்டு பூஜை அறையில் உள்ள ஒரு பொருள் தான் கற்பூரம். நல்ல நறுமணத்தைக் கொண்ட கற்பூரமானது பூஜையின் போது பயன்படுத்தப்படுகிறது. சில வீடுகளில் இந்த பிரியாணி இலையையும், கற்பூரத்தையும் ஒன்றாக எரிக்கும் பழக்கம் இருக்கும்.

இது பெரும்பாலும் மத சடங்குகளுடன் தொடர்புடையது என்றாலும், வாஸ்துப்படி இது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும், நல்ல அதிர்ஷ்டத்திற்காகவும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் இதற்கு எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் இல்லை. ஆயினும் இவ்விரு பொருட்களையும் எரிக்கும் போது, அது ஒரு நல்ல நறுமணத்தை வெளியிடுவதால், ஒரு இனிமையான சூழலை உருவாக்க பெரிதும் உதவி புரியும். இப்போது கற்பூரத்தையும் பிரியாணி இலையையும் ஒன்றாக எரிப்பதால் கிடைப்பதாக நம்பப்படும் சில நன்மைகளைக் காண்போம்.
துர்நாற்றத்தைக் குறைக்கும்
உங்கள் வீடு துர்நாற்றத்துடன் இருந்தால், அப்போது கற்பூரம் மற்றும் பிரியாணி இலையை ஒன்றாக எரித்து, அதன் புகையை வீடு முழுவதும் காட்டுவதன் மூலம், அதிலிருந்து வெளிவரும் வாசனையானது துர்நாற்றத்தைப் போக்கி ஒரு தனித்துவமான வாசனையை கொடுக்கும். எனவே இனி வீட்டை புத்துணர்ச்சியுடனும், நல்ல மணத்துடனும் வைத்துக் கொள்ள கெமிக்கல் கலந்த ரூம் பிரஷ்ஷனர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இதைப் பயன்படுத்தலாம்.
கொசுக்கள், பூச்சிகளை விரட்டும்
பழங்காலத்தில் நம் முன்னோர்கள் கொசுக்கள் மற்றும் பூச்சிகளை தடுப்பதற்காக சாம்பிராணி புகைமூட்டுவார்கள் அல்லது வீட்டிற்கு அருகில் சில மூலிகை இலைகளால் புகைமூட்டுவார்கள். அதேப் போல் கற்பூரத்துடன் பிரியாணி இலையை சேர்த்து எரித்து, அந்த புகையை வீட்டில் காட்டுவதால், வீட்டில் கொசுக்கள் மற்றும் பூச்சிகள் வருவது தடுக்கப்படும். எனவே உங்கள் வீட்டில் கொசுத்தொல்லை அதிகம் இருந்தால், இந்த வழியை முயற்சித்துப் பாருங்கள்.
வீட்டில் இதமான சூழல் உருவாகும்
கற்பூரத்துடன் பிரியாணி இலையை சேர்த்து எரிக்கும் போது வெளிவரும் புகையானது இனிமையான நறுமணத்தைக் கொண்டிருப்பதால், அது மனதிற்கு அமைதியான உணர்வை தருவதாக நம்பப்படுகிறது. எனவே வேலை முடிந்து மாலை வேளையில் வீட்டிற்கு வந்ததும், மனதிற்கு அமைதியை தர கற்பூரத்தையும், பிரியாணி இலையையும் எரிக்கலாம்.
எதிர்மறை ஆற்றல் நீங்கும்
பல இந்திய பாரம்பரியங்களில், கற்பூரம் மத சடங்குகளின் போது முக்கியமானதாக கருதப்படுகிறது. அதே வேளையில் பிரியாணி இலைகளும் ஆன்மீக முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. இந்த இரண்டையும் வீட்டில் ஒன்றாக எரிப்பது என்பது வீட்டை தூய்மைப்படுத்தவும், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை அகற்றவும் உதவுவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கைகள் அறிவியல் கண்டுபிடிப்புகளை விட, கலாச்சார மற்றும் மதப் பாரம்பரியங்களை அடிப்படையாகக் கொண்டவை.
கற்பூரம் மற்றும் பிரியாணி இலையை பாதுகாப்பாக எரிப்பது எப்படி?
* ஒரு சாம்பிராணி தூபக்காலை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1-2 கற்பூரங்களை வைத்து, அத்துடன், 1-2 பிரியாணி இலையை வைக்க வேண்டும்.
* பின்பு தீப்பெட்டி கொண்டு கவனமாக சில நிமிடங்கள் எரிய வைக்க வேண்டும்.
* அப்படி கற்பூரம் எரியும் போது அறையில் சரியான காற்றோட்டம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
* முக்கியமாக கற்பூரம் எரியும் இடத்திற்கு அருகில் காகிதம், திரைச்சீலை அல்லது பிற எரியக்கூடிய பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
* மேலும் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு எட்டாத இடத்தில் வைத்திருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
