Latest Updates
-
ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது!
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட..
Keerai Sadham Recipe In Tamil: காலையில் உங்கள் பிள்ளைகளின் லன்ச்பாக்ஸிற்கு என்ன செய்து கொடுப்பது என்று இன்னும் முடிவெடுக்கவில்லையா? பெரும்பாலும் லன்ச்பாக்ஸிற்கு கலவை சாதம் தான் செய்து கொடுப்பீர்களா? அதுவும் தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம் என்று தான் செய்து கொடுப்பீர்களா?
உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் ஒரு சூப்பரான கலவை சாதம் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? வீட்டில் கீரை உள்ளதா? அப்படியானால் அந்த கீரையைக் கொண்டு கீரை சாதம் செய்து கொடுங்கள். இந்த கீரை சாதம் சுவையாக இருப்பதோடு, சத்தானதும் கூட.

இந்த கீரை சாதத்தை ஒருமுறை செய்து கொடுத்தால், பின் அடிக்கடி இந்த சாதத்தை கேட்பார்கள். அந்த அளவில் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த கீரை சாதத்திற்கு எந்த கீரையை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். 10 நிமிடத்தில் இந்த சாதத்தை செய்துவிடலாம்.
உங்களுக்கு இந்த கீரை சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கீரை சாதம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* பூண்டு - 3 பல்
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* பெரிய வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* கீரை - 1 கட்டு (பொடியாக நறுக்கியது)
* பாஸ்மதி அரிசி - 1 கப் (30 நிமிடம் ஊற வைத்தது)
* தேங்காய் பால் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய்
ஊற்றி சூடானதும், சீரகம், பெருங்காயத் தூள், பூண்டு பற்கள், பச்சை
மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய 1 கட்டு கீரையை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து கிளறி, 1 கப்
தேங்காய் பால் மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி,
குறைவான தீயில் வைத்து, 1 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து கிளறினால், சுவையான மற்றும்
சத்தான கீரை சாதம் தயார்.



Click it and Unblock the Notifications
