Latest Updates
-
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது! -
Navratri 2026: நவராத்திரியில் துர்கா தேவியை கனவில் கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? -
வாஸ்துப்படி வீட்டின் இந்த 5 இடத்தில் மயில் இறகை வையுங்க.. செல்வம் இருமடங்காக அதிகரிக்கும்.. -
18 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிந்து அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
மணமணக்கும்.. தட்டப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்! -
சனி பகவான் ஆசியால் அடுத்த 118 நாட்கள் இந்த 5 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா இருப்பாங்க.. உங்க ராசி என்ன? -
இட்லி, தோசைக்கு இந்த சின்ன வெங்காய சட்னியை செய்யுங்க.. வழக்கத்தை விட 2 எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
Rahu Transit In Capricorn 2026: ஜோதிடத்தில் ராகு ஒரு நிழல் கிரகமாக கருதப்படுகிறது. இந்த ராகு ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். இப்படி நீண்ட காலமா ஒரு ராசியில் ராகு இருப்பதால், ராகுவின் நிலையில் ஏற்படும் மாற்றம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்கதியில் பயணிக்காமல் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர்.

தற்போது ராகு கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் இந்த ராகு டிசம்பர் 05 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த மகர ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். ராகு இந்த மகர ராசிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு பின் நுழையவுள்ளார்.
இந்த ராகு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் நிதி வளர்ச்சி, வேலையில் முன்னேற்றம் போன்றவற்றை அனுபவிப்பார்கள். இப்போது 18 ஆண்டுகளுக்கு பின் மகர ராசிக்கு செல்லும் ராகுவால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
2026 ராகு பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட காலமாக வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இந்த ராகு பெயர்ச்சிக்கு பின் நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும்.
வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் தங்கள் தொழிலை விரிவுபடுத்த வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும், எந்தவொரு பெரிய முதலீடுகளையோ அல்லது வணிக ஒப்பந்தங்களையோ செய்வதற்கு முன் கவனமாக ஆராய்ந்து பின் முடிவெடுக்க வேண்டும். அவசர முடிவுகள் இழப்புகளுக்கு வழிவகுக்கும். சரியாக திட்டமிட்டு, விடாமுயற்சியுடன் எதையும் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ரிஷபம்
2026 ராகு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமையை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வருமானத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளும் தேடி வரும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
தொழிலதிபர்கள் தங்கள் தொழில்களில் மாற்றங்கள் அல்லது விரிவாக்கங்களைத் திட்டமிடலாம். நிதி விஷயங்களில் லாபம் ஈட்ட வாய்ப்புகள் இருந்தாலும், செலவுகளுக்கும் சேமிப்புக்கும் இடையே ஒரு சமநிலையைப் பேணுவது மிகவும் முக்கியம். வேலையை மாற்ற, கூட்டு தொழில் செய்ய அல்லது முதலீடு செய்யும் முன் நன்கு ஆராய்ந்து பின் முடிவெடுக்க வேண்டும்.
விருச்சிகம்
2026 ராகு பெயர்ச்சியானது விருச்சிக ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவை திறக்கப் போகிறது. அதுவும் தொழிலதிபர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
பணிபுரிபவர்கள் தங்களின் கடின உழைப்பு, அனுபவம் மற்றும் திறன்களின் அடிப்படையில் வேலையில் சிறப்பாகச் செயல்படலாம். சிலர் புதிய பொறுப்புகளையோ அல்லது வேலை தொடர்பான குறிப்பிடத்தக்க வாய்ப்புகளையோ பெறலாம். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி, எதிர்காலத்திற்காகச் சேமிப்பதும் நன்மை பயக்கும். முக்கியமாக பொறுமையுடனும் சரியாக திட்டமிட்டு எடுக்கப்படும் முடிவுகளும் நீண்ட காலத்திற்கு உதவியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



