2027-ல் 3 முறை ராசியை மாற்றும் குரு பகவான்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது!

Jupiter Will Transit Three Times In 2027: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் குரு பகவான். இந்த குரு பகவான் அறிவு, கல்வி, செல்வம், குழந்தைகள் மற்றும் அதிர்ஷ்டத்தின் காரணியாக கருதப்படுகிறார். இப்படிப்பட்ட குரு பகவான் ஒருவரது ஜாதகத்தில் சிறப்பான நிலையில் இருந்தால் அந்நபர் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை காண்பதோடு, செழிப்பான வாழ்க்கையை வாழ்வார்கள். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குரு பகவானின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.

Jupiter Will Transit Three Times In 2027 These Zodiac Signs Will Be Lucky

பொதுவாக குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அதுவும் 2027 ஆம் ஆண்டில் குரு பகவான் மூன்று முறை ராசியை மாற்றுவார். அதில் முதலாவதாக ஆண்டின் தொடக்கத்தில், அதுவும் ஜனவரி 25 ஆம் தேதி வக்ர நிலையில் உள்ள குரு பகவான் கடக ராசிக்குள் நுழைவார். அதன் பின் ஜூன் மாதம் சிம்ம ராசிக்கும், நவம்பர் மாதத்தில் கன்னி ராசிக்கும் நுழைவார்.

குரு பகவானின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது 2027-ல் 3 முறை ராசியை மாற்றும் குரு பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம்

2027 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அதுவும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் புதிய பொறுப்புக்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். பல கடமைகளை சிறப்பாக நிறைவேற்ற முடியும். குரு பகவானின் அருளால் நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

சிம்மம்

2027 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஏற்படும். முக்கியமாக நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் வாய்ப்புள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த நிறுவனத்திலோ, இடத்திலோ வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஜூன் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் தொழில் மற்றும் நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். அதுவும் நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும்.

கன்னி

2027 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். நவம்பர் மாத குரு பெயர்ச்சியால் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் காணக்கூடும். வெளிநாட்டில் பணிபுரியவோ அல்லது படிக்கவோ நினைத்தால், அதற்கான நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரலாம்.

தனுசு

2027 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியால் தனுசு ராசிகளுக்கு புத்தாண்டில் தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலையிலும் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் தங்களின் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட கால பணப் பிரச்சனைகள் குறைந்து, புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

மீனம்

2027 ஆம் ஆண்டின் குரு பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய கதவுகள் திறக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கி, தெளிவான முடிவுகளை எடுபீர்கள். இந்த முடிவுகள் நல்ல பலனைத் தரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இருந்தாலும் எந்த ஒரு புதிய முதலீடுகளை செய்யும் முன்பும், அதில் உள்ள ரிஸ்க்குகளை மதிப்பிட வேண்டும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முக்கியமாக ஆண்டின் இறுதியில் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, November 29, 2026, 11:05 [IST]
Desktop Bottom Promotion