துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது!

Trigrahi Yog 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் நவகிரகங்களில் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த வகையில் சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன் ஆவார்.

Trigrahi Yog 2026 In Libra These Zodiac Signs Will Be Lucky

சூரியன் இந்த துலாம் ராசிக்குள் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே சுக்கிரன் மற்றும் புதனும் இருப்பதால், இந்த 3 கிரகங்களின் சேர்க்கையல் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த திரிகிரக யோகத்தால் தொழில், வியாபாரம் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காணவுள்ளனர். இப்போது அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

துலாம்

துலாம் ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதுவும் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, வருமானத்தில் உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, இந்த யோக காலத்தில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கலாம். பணம் தொடர்பான முடிவுகள் நல்ல ஆதாயத்தைத் தரும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசியின் 2 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நட்புகளால் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறக்கூடும். நிதி நிலைமை வழக்கத்தை விட நன்றாக இருக்கும். இருப்பினும் அவசரப்பட்டு எந்த முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசியின் 9 ஆவது வீட்டில் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. எனவே இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சாதகமாக இருக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இக்காலத்தில் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மொத்தத்தில் எந்த வேலையை செய்தாலும், அதில் நல்ல வெற்றி கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, October 15, 2026, 23:20 [IST]
Desktop Bottom Promotion