Latest Updates
-
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது! -
Navratri 2026: நவராத்திரியில் துர்கா தேவியை கனவில் கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? -
வாஸ்துப்படி வீட்டின் இந்த 5 இடத்தில் மயில் இறகை வையுங்க.. செல்வம் இருமடங்காக அதிகரிக்கும்.. -
18 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிந்து அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
மணமணக்கும்.. தட்டப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
டியோடரண்ட், ப்ரா, ஹேர் டை - மார்பக புற்றுநோயை ஏற்படுத்துமா? - விளக்கும் மார்பகப் புற்றுநோய் நிபுணர்!
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்!
Morning Habits In Tamil: காலையில் எழுந்ததும் மேற்கொள்ளும் பழக்கங்கள் நமது உடல் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சொல்லப்போனால் ஒரு நாள் சிறப்பாக இருப்பதும் சரி, மோசமாக இருப்பதும் சரி, அது அன்றைய தினத்தில் காலையில் எழுந்ததும் நாம் மேற்கொண்ட பழக்கங்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி நமது காலை பழக்கங்கள் அன்றைய தினத்தை மட்டும் தீர்மானிப்பது மட்டுமின்றி, நமது சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது தெரியுமா?

சிறுநீரக மருத்துவரான டாக்டர் வெங்கட்சுப்ரமணியம் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சிறுநீரகங்களைப் பாதிக்கக்கூடிய 5 காலைப் பழக்கங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். இந்த பழக்கங்களை ஒருவர் கொண்டிருந்தால், அவற்றை உடனே தவிர்க்குமாறு டாக்டர் கூறியுள்ளார். இப்போது ஏன் அந்த காலை பழக்கங்களை தவிர்க்க வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
சிறுநீரகங்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய 5 காலைப் பழக்கவழக்கங்களின் பட்டியலைப் பகிர்ந்து கொண்ட டாக்டர், பின்வருமாறு தனது இன்ஸ்டா பக்கத்தில் எழுதியுள்ளார். அது "சிறுநீரகங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இரவு முழுவதும் உழைக்கின்றன. எனவே அவற்றின் வேலையை கடினமாக்கி உங்களின் நாளை தொடங்காதீர்கள். காலை பழக்கத்தில் செய்யும் சிறு மாற்றங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சிறுநீரகங்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கை வகிக்கின்றன."
1. காபி குடிக்கும் முன் தண்ணீர் குடிக்கவும்
காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிக்காமல் இருப்பவர்களை டாக்டர் எச்சரிக்கிறார். ஏனெனில் இரவு முழுவதும் லேசான நீர்ச்சத்து குறைபாட்டிற்கு பின், உடலும், சிறுநீரகங்களும் தண்ணீரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும். எனவே அப்படிப்பட்ட சூழ்நிலையில் காபி அல்லது டீயைக் குடிப்பதற்கு பதிலாக, ஒரு டம்ளர் நீரைக் குடித்து தினத்தை தொடங்குங்கள் என்று டாக்டர் பரிந்துரைத்தார்.
2. சிறுநீரை அடக்காதீர்கள்
காலையில் எழுந்தவுடன் நீண்ட நேரம் சிறுநீரை அடக்காமல், உடனே சிறுநீர்ப்பையை காலி செய்ய வேண்டும் என்று டாக்டர் எச்சரித்தார். ஏனெனில் இரவு முழுவதும் சிறுநீரை அடக்கி வைப்பதால், நமது சிறுநீர்ப்பை ஏற்கனவே விரிவடைந்து, சிறுநீரை வெளியேற்றுவதற்காகக் காத்திருக்கும். எனவே காலையில் எழுந்ததும் மட்டுமின்றி, நாள் முழுவதும் சிறுநீரக அடக்காதீர்கள் என்று சிறுநீரக டாக்டர் அறிவுறுத்தினார்.
3. வலி நிவாரணி மாத்திரைகளை தவிர்க்கவும்
காலையில் எழுந்ததும் எவ்வளவு தான் தலைவலியாக இருந்தாலும் வெறும் வயிற்றில் வலி நிவாரணிகளை உட்கொள்ள வேண்டாம் என்று சிறுநீரக மருத்துவர் அறிவுறுத்தினார். வலி நிவாரணி மாத்திரைகளை அளவாக எடுக்காவிட்டால், பின் அவை சிறுநீரகங்களை பாதித்துவிடும். அதுவும் வெறும் வயிற்றில் எடுத்தால், பாதிப்பு இன்னும் தீவிரமாக இருக்கும் என்று டாக்டர் கூறினார்.
4. உடற்பயிற்சிக்கு பின் நீர் அவசியம் அருந்தவும்
காலையில் எழுந்ததும் உடற்பயிற்சியுடன் நாளை தொடங்குவது மிகவும் நல்லது. ஆனால் கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகு நீர் அருந்தாமல் இருப்பது உங்கள் சிறுநீரகங்களுக்கு தீங்கை விளைவிக்கும். எனவே தினத்தை சிறப்பாக தொடங்க உடற்பயிற்சி சிறந்த வழியாக இருந்தாலும், அதற்கு பின் நீரை அதிகம் அருந்துவதும் முக்கியம் என்று டாக்டர் அறிவுறுத்தினார்.
5. காலை உணவை தவிர்க்காதீர்
எப்போதும் காலை உணவைத் தவிர்க்க கூடாது என்று டாக்டர் வெட்கட்சுப்ரமணியம் அறிவுறுத்தினார். தற்போதைய அவசரமான மற்றும் பரபரப்பான வாழ்க்கை முறையினால், காலையில் சாப்பிடுவதை நிறைய பேர் மறந்து விடுகிறார்கள். ஆனால் ஒரு தினத்தை நல்ல புரோட்டீன் நிறைந்த உணவுகளுடன் தொடங்கும் போது, அது உடலுக்கு நன்மை பயக்கும் என்று டாக்டர் கூறினார். முக்கியமாக காலை உணவைத் தவிர்த்தால், ஜங்க் உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். எனவே காலை உணவை எப்போதும் தவிர்க்காதீர்கள் என்று டாக்டர் எச்சரித்தார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
