Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்!

Ayudha Pooja Cleaning Tips In Tamil: என்ன தான் நாம் நம் வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொண்டாலும், பண்டிகை காலங்களில் ஒட்டுமொத்த வீட்டையும் சுத்தம் செய்யும் வழக்கம் நம் முன்னோர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அதுவும் ஆயுத பூஜை வரப்போகிறது. முக்கியமாக இந்த ஆண்டின் ஆயுத பூஜை அக்டோபர் 19 ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இதில் ஒரு நற்செய்தி என்னவென்றால், இந்த ஆயுத பூஜைக்கு முந்தைய இரண்டு நாட்கள் வார இறுதி என்பதால் பெரும்பாலானோர் விடுமுறையில் இருப்பார்கள். இதனால் வீட்டை சுத்தம் செய்ய போதுமான காலம் இருக்கும்.

Ayudha Pooja Cleaning Tips How To Make Homemade DIY Kitchen Cleaner

சொல்லப்போனால் வீட்டிலேயே சமையலறையில் தான் அழுக்குகள் வேகமாக சேரும். குறிப்பாக இந்த பகுதியில் தான் எண்ணெய் பசை கறைகள் அதிகம் இருக்கும். எனவே சமையலறையை சுத்தம் செய்வது என்பது ஒரு சவாலான ஒன்றாகவே இருக்கும். சமையலறையை எளிதில் சுத்தம் செய்வதற்கு பலர் கடைகளில் விற்கப்படும் விலை அதிகமான மற்றும் கெமிக்கல் கலந்த க்ரீனர்களை வாங்கி பயன்படுத்துவார்கள்.

உங்களுக்கு அதிக பணம் செலவழித்து சமையலறையை சுத்தம் செய்ய விருப்பமில்லையா? அப்படியானால் வீட்டிலேயே ஒருசில பொருட்களைக் கொண்டு நேச்சுரல் க்ளீனரை தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த நேச்சுரல் க்ரீனர் இயற்கை பொருட்களைக் கொண்டு தயாரிக்கக்கூடியதால், காசும் மிச்சம், அழுக்குகளும் எளிதில் வெளியேறும். இப்போது இந்த நேச்சுரல் க்ரீனரை எப்படி தயாரிப்பது என்பதைக் காண்போம்.

தேவையான பொருட்கள்:

* வெள்ளை வினிகர் - 1 கப்
* சோப்பு ஆயில்
* பேக்கிங் சோடா - 1 டேபிள் ஸ்பூன்
* வெதுவெதுப்பான நீர்
* விருப்பமான நறுமண எண்ணெய்

தயாரிக்கும் முறை:

* ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வெதுவெசூப்பான நீரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் வினிகர், சோப்பு ஆயில், பேக்கிங் சோடா ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு பாட்டில் முழுவதும் நிரம்பும் வரை வெதுவெதுப்பான நீரை ஊற்ற வண்டும்.
* அடுத்து அந்த பாட்டிலை மூடி நன்கு குலுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நல்ல மணத்திற்காக உங்களுக்கு பிடித்த நறுமண எண்ணெய்களை சில துளிகள் சேர்த்து நன்கு குலுக்கினால் சூப்பரான நேச்சுரல் க்ளீனர் தயார்.

எப்படி பயன்படுத்துவது?

* தயாரித்து வைத்துள்ள நேச்சுரல் க்ளீனரை, பிசுபிசுப்பாக இருக்கும் சமையலறை திட்டு, சுவர்கள், ஜன்னல் கம்பிகள், கேபினெட் கதவுகள் போன்ற பகுதிகளில் ஸ்ப்ரே செய்ய வேண்டும்.

* அதன் பின் ஈரமான ஸ்பாஞ்ச் கொண்டு, துடைத்தால் எளிதில் பிசுபிசுப்புத்தன்மை போய்விடும்.

* அதன் பின் சுத்தமான நீரில் நனைத்த துணியால் மீண்டும் அப்பகுதிகளை துடைத்து எடுத்தால், அப்பகுதிகளானது பளபளவென்று புதிது போன்று மின்னும். இறுதியாக ஈரமில்லாத துணியால் ஒருமுறை துடைத்துவிடுங்கள்.

மேலே கொடுக்கப்பட்டுள்ள க்ளீனர் ஒன்று இருந்தாலே சமையலறையை சிரமமின்றி சுத்தம் செய்யலாம். எனவே இந்த ஆயுத பூஜைக்கு உங்கள் வீட்டை சுத்தம் செய்ய இந்த ஒரு நேச்சுரல் க்ளீனரை தயாரித்து பயன்படுத்தி நன்மை பெறுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion