Latest Updates
-
September 2026 Career Horoscope: செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இந்தியாவில் பின்னோக்கி பாயும் ஒரேயொரு நதி எது தெரியுமா? இது பின்னோக்கி பாய காரணம் என்ன தெரியுமா? -
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
Nagercoil Vazhakkai Varval Recipe in Tamil: மதியம் லன்ச்க்கு ஒரு சூப்பரான சைடிஷ் செய்ய ஆசைப்படுறீங்களா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படினா அதை நாகர்கோவில் ஸ்டைலில் வாழைக்காய் துவட்டல் செய்யுங்க. வாழைக்காயை பொதுவாக பொரியலோ அல்லது புளிக்குழம்புதான் செய்வோம். ஆனால் இந்த வாழைக்காய் துவட்டல் இதுவரை நீங்கள் சாப்பிடாத சுவையில் இருக்கும்.

இந்த வாழைக்காய் துவட்டல் சாம்பார் சாதம், தயிர் சாதம் என அனைத்துடன் பொருத்தமாக இருக்கும். வாழைக்காயை இப்படி வறுவல் செய்தால், வாழைக்காய் பிடிக்காதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு நாகர்கோவில் ஸ்டைல் வாழைக்காய் துவட்டலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நாகர்கோவில் வாழைக்காய் துவட்டல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- வாழைக்காய் - 2 (தோல் சீவி, துண்டுகளாக நறுக்கியது)
- தண்ணீர் - தேவையான அளவு
- மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- சிறிய துண்டு புளி
அரைக்க:
- 5 சின்ன வெங்காயம்
- 2 பல் பூண்டு
- ½ ஸ்பூன் சீரகம்
- ¼ ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள்
- 3 ஸ்பூன் துருவிய தேங்காய்
- ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- ½ ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- சிறிது கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் நீரைக் கொதிக்க வைக்கவும். அதில் மஞ்சள் தூள், புளி, உப்பு மற்றும் நறுக்கிய வாழைக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- வாழைக்காய் மென்மையாகும் வரை வேகவைக்கவும். பிறகு, நீரை முழுமையாக வடித்துவிட்டு தனியே எடுத்து வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு, மிளகாய் தூள், பெருங்காயம், துருவிய தேங்காய், மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து, சற்று கொரகொரப்பான விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கவும். அதில் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடித்ததும், உளுத்தம் பருப்பு பொன்னிறமாக மாற விடவும்.
- பின்னர் வேகவைத்த வாழக்காயைச் சேர்த்து, 2-3 நிமிடங்களுக்கு மெதுவாக வதக்கவும்.
- அதன்பின் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- மசாலாவின் பச்சை வாசனை நீங்கி மசாலா வாழைக்காயின் மீது சீராகப் படியும் வரை, அவ்வப்போது கிளறிவிட்டபடியே மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரை கிளறவும்.
- அவ்வளவுதான் சூப்பரான நாகர்கோவில் ஸ்டைல் வாழைக்காய் துவட்டல் ரெடி!



Click it and Unblock the Notifications