Latest Updates
-
இந்தியாவில் பின்னோக்கி பாயும் ஒரேயொரு நதி எது தெரியுமா? இது பின்னோக்கி பாய காரணம் என்ன தெரியுமா? -
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்.. -
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க..
September 2026 Career Horoscope: செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
September 2026 Career Horoscope In Tamil: 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நுழைந்துவிட்டோம். பொதுவாக ஒரு புதிய மாதத்தில் நுழையும் போது, அந்த மாதத்தில் கிரகங்களின் நிலைகளால் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதாவது மாற்றங்களைக் காணக்கூடும். முக்கியமாக தொழில் வாழ்க்கையில் மாற்றங்கள் காணப்படும்.

அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் சுக்கிரன், புதன், சூரியன் போன்ற கிரகங்கள் மாதத்தின் முதல் பாதியில் தனது சொந்த ராசியில் இருப்பதோடு, குரு பகவான் தனது உச்ச ராசியில் இருப்பார். அதன் பின் மாதத்தின் இரண்டாம் பாதியில் செவ்வாய் குருவுடன் சேர்ந்தும், புதன் சுக்கிரனுடன் சேர்ந்தும் பயணிப்பார்கள்.
இப்படியான கிரகங்களின் நிலைகளால் செப்டம்பர் மாதத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் தங்கள் தொழில் வாழ்க்கையில் நேர்மறையான அல்லது எதிர்மறையான பலன்களைப் பெறலாம். இப்போது 2026 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத கிரக நிலைகளால் 12 ராசிக்காரர்களுக்கும் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தின் முதல் பாதியானது தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பான பயணங்களால் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாதத்தின் நடுப்பகுதியில் அன்றாடப் பணிகள் மற்றும் பொறுப்புகள் மீதான கவனம் சற்று அதிகரிக்கும். பணியிடத்தில் வரும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும்போது நீங்கள் சற்று உணர்ச்சிவசப்படக்கூடும். அப்போது பதட்டப்படாமல் பொறுமையாக யோசித்து பின் பதிலளிப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டால், இந்த மாதம் உங்கள் தொழில் வாழ்க்கைக்குப் பயனுள்ளதாக அமையும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் சந்திக்கும் விமர்சனங்களை மனதில் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் தொழில் சார்ந்த விஷயங்கள் சுறுசுறுப்பாக இருக்கும். மாத தொடக்கத்தில் தொழிலதிபர்கள் புதிய திட்டங்களை செயல்படுத்துவது, புதிய வாடிக்கையாளகளை தொடர்பு கொள்வது போன்றவற்றால் உற்சாகமாக இருக்கக்கூடும். இருப்பினும் அவசரப்பட்டு எதையும் தொழில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் பொறுமையும் தெளிவான தகவல்தொடர்பும் தொழில் விஷயங்களில் நன்மை பயக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் பணிவாக பேசுவது நல்லது. சூரியனின் நிலையால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். செவ்வாயின் நிலை உங்கள் லட்சியத்தை அதிகரிக்கும். வேலை மாற்றுவது குறித்த எண்ணம் இருந்தால், கவனமாக முடிவெடுக்க வேண்டும். பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் தொழில்ரீதியான விஷயங்கள் நம்பிக்கையுடன் தொடங்கும். மாத தொடக்கத்தில் சூரியன் சொந்த ராசியில் இருப்பதால், இக்காலம் உங்களின் யோசனைகளை செயல்படுத்துவது, ஒரு புதிய திட்டத்தை பொறுப்பேற்க வேண்டியது போன்றவற்றிற்கு உகந்ததாக இருக்கும். இம்மாதத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதை விட அமைதியாகப் பணியாற்ற விரும்புவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் தொழில் வாழ்க்கை வலுவானதாக இருக்கும். மாதத்தின் தொடக்கத்தில் நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்க மும்முரமாக முயற்சிப்பீர்கள். வேலை தேடுபவர்களுக்கு மற்றும் வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் தொழில் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு அதிக முக்கியத்துவத்தை பெறும். பணியிடத்தில் உங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். தொழிலை அணுகும் விதம் மேம்படும். இதன் மூலம் பயனுள்ள தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது எளிதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். அமைதியாக பணியாற்றி அடுத்த கட்டத்திற்கு செல்ல நினைப்பீர்கள். பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடன் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக வலுவாக இருக்கும். இம்மாதத்தில் தொழில் விஷயங்களை ஒழுங்காக கையாள்வீர்கள். பணியிடத்தில் வெறும் பாராட்டைப் பெற நினைப்பதை விட, தொடர்ச்சியான உழைப்பின் மூலம் உங்களை நிரூபிப்பதே சிறந்தது. கடினமாக உழைத்தால், உயர் அதிகாரிகள் அதை கவனித்து புதிய பொறுப்புக்களை வழங்கலாம். மோசமான சூழ்நிலைகளின் போது அவசரப்பட்டு செயல்படுவதைத் தவிர்த்து, பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் தொழிலில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இப்படி தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பதால், நிதி நிலையிலும் நல்ல உயர்வு ஏற்படலாம். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்களால் நல்ல லாபம் கிடைக்கும். இம்மாதத்தில் முழுக்க முழுக்க உணர்ச்சிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக புதிய சூழ்நிலைகளைக் கற்றுக் கொள்ளவும் அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளவும் உங்களுக்கு இருக்கும் ஆர்வம் கைகொடுக்கும். வேலையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க ஆர்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் பணிச்சுமை அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் தொழில் வாழ்க்கையில் தனியாக முன்னேறுவதை விட, மற்றவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை நீங்கள் அதிகமாக உணர்வீர்கள். வேலையில் பொறுமையாக இருக்க வேண்டும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளருடனான நல்ல உறவால் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



