1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும்

Posted By:

Nellai Style Onion Gothsu Recipe in Tamil: இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சைடிஷ் செய்து போரடித்து விட்டதா? சாம்பார், சட்னி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக தென் தமிழக ரெசிபிக்களை முயற்சிக்க விரும்புகிறீர்களா? அப்படியென்றால் இந்த நெல்லை ஸ்டைல் சின்ன வெங்காய கொத்சை ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள். இந்த சின்ன வெங்காய கொத்சு செய்வதற்கு மிகவும் எளிதானது அதேசமயம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என சாப்பிட்டு போரடித்தவர்கள் இந்த மாதிரி சைடிஷ் செய்து கொடுத்தால் வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

Nellai Style Onion Gothsu Recipe How to Make at Home in Tamil

உங்களுக்கு நெல்லை ஸ்டைல் சின்ன வெங்காய கொத்சை எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நெல்லை ஸ்டைல் சின்ன வெங்காய கொத்சு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைக்க:

- 1/2 ஸ்பூன் மல்லி விதை
- 1 ஸ்பூன் கடலைப்பருப்பு
- 1/2 ஸ்பூன் சீரகம்
- 4 மிளகு
- 1/2 ஸ்பூன் சோம்பு
- 3 வர மிளகாய்
- 1/4 கப் தேங்காய்

கொத்சு செய்ய:

- 15 சின்ன வெங்காயம்
- 1/4 கப் பெரிய வெங்காயம்
- 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 ஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த் தூள்
- 2 பெரிய தக்காளி
- தேவையான அளவு உப்பு
- 1/2 கப் புளித் தண்ணீர்
- 1/4 கப் பாசிப்பருப்பு
- தேவையான அளவு தண்ணீர்
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள்

தாளிக்க:

- 1/2 ஸ்பூன் கடுகு
- 1 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 2 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 சிட்டிகை பெருங்காயம்

செய்முறை:

- முதலில், பாசிப்பருப்பை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வேகவைக்கவும்.

- ஒரு கடாயில் மல்லி விதை, கடலைப் பருப்பு, சீரகம், மிளகு, சோம்பு மற்றும் வரமிளகாயை சேர்த்து வதக்கவும்.

- வாசனை வந்ததும் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

- இவற்றை ஆறவைத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்.

- கடுகு பொரிந்ததும் அதனுடன் பச்சை மிளகாய், பெருங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.

- அதன்பின் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து, அவை பொன்னிறமாகி மாறி மென்மையாகும் வரை வதக்கவும்.

- பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

- பின்னர்அதனுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் மற்றும் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, தக்காளி நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும்.

- அதன்பின் புளிக்கரைசலை சேர்த்துக் கொதிக்கவிடவும்.

- இறுதியாக வேகவைத்த பருப்பு, தண்ணீர் மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்தால் சுவையான நெல்லை ஸ்டைல் கொத்சு ரெடி!

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 1, 2026, 21:33 [IST]
Desktop Bottom Promotion