டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க

பெரும்பாலான வீடுகளில் இருக்கும் ஒரு முக்கியமான சமையலறை சாதனம் குளிர்சாதனப் பெட்டியாகும். பால் பொருட்கள் முதல் காய்கறிகள், இறைச்சி என அனைத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு, அவற்றின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதில் குளிர்சாதனப் பெட்டி முக்கியப்பங்கு வகிக்கிறது. குளிர்சாதனப் பெட்டி என்னதான் பயனுள்ள சதமனாக இருந்தாலும், அது அதிகப்படியான துர்நாற்றம் மற்றும் ஈரப்பதத்திற்கும் உள்ளாகிறது.

Benefits of Keep a Toilet Paper Roll in the Fridge

இந்த பிரச்சினைகளை சரி செய்ய தற்போது மக்கள் சற்றும் விரும்பத்தகாத ஒரு பொருளை அதற்குள் வைக்கிறார்கள். அது ஒரு டாய்லெட் பேப்பர் சுருள். இது கேட்பதற்கு விசித்திரமாகத் தோன்றினாலும், குளிர்சாதனப் பெட்டியில் கழிப்பறை காகிதத்தை வைப்பது விரும்பத்தகாத துர்நாற்றம் மற்றும் ஈரப்பதத்தைக் குறைக்க உதவும் என்று நம்புகின்றனர். ஆனால் இது உண்மையிலேயே பலனளிக்குமா? இதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது ஏன்?

இது மிகவும் எளிதானது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு புதிய டாய்லெட் பேப்பர் சுருளை எடுத்து, அதை ஒரு அலமாரியிலோ அல்லது ஒரு மூலையிலோ வைத்து, சில மணிநேரங்கள் அல்லது இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட வேண்டும். இதற்கான காரணம் என்னவென்றால், இது குளிர்சாதனப் பெட்டிக்குள் இருக்கும் ஈரப்பதத்தையும், துர்நாற்றத்தையும் உறிஞ்ச உதவுகிறது. மேலும், குளிர்சாதனப் பெட்டிகள் மூடப்பட்ட இடங்கள் என்பதால், வெங்காயம், பூண்டு, சீஸ் மற்றும் மீதமுள்ள உணவுகள் போன்றவற்றின் வாசனைகள் சில சமயங்களில் தங்கி, ஒன்றாகக் கலக்கக்கூடும். டாய்லெட் பேப்பர் அதிக உறிஞ்சும் தன்மை கொண்டது என்றும், அதனால் அது ஈரப்பதத்தையும், விரும்பத்தகாத வாசனையையும் உறிஞ்சிக்கொள்ளும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது விரும்பத்தகாத வாசனையை விரட்டும் எளிதான தந்திரமாகும்.

இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன?

இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் உறிஞ்சுதல் பற்றியதாகும். பெரும்பாலான கழிப்பறைத் டாய்லெட் பேப்பர்கள் செல்லுலோஸ் இழைகளால் ஆனவை. இந்த இழைகளில் நீரைத் தேக்கி வைக்கக்கூடிய பல நுண்ணிய துளைகள் உள்ளன, எனவே இந்த இழைகள் அதன் சுற்றுப்புறத்திலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளும். மேலும் குளிர்சாதனப் பெட்டியில், மூடப்படாத உணவு மற்றும் ஒவ்வொரு முறை கதவைத் திறக்கும்போதும் உள்ளே நுழையும் ஈரப்பதமான காற்று ஆகியவற்றால் அதிகப்படியான ஈரப்பதம் ஏற்படலாம். ஒரு டாய்லெட் சுருளின் பெரும்பகுதி காற்றில் வெளிப்பட்டிருப்பதால், அந்த ஈரப்பதத்தில் ஒரு பகுதியை எளிதில் ஈர்த்துக் கொள்கிறது.

குளிர்சாதனப் பெட்டியின் துர்நாற்றத்தைக் குறைக்குமா?

இது குளிர்சாதனப் பெட்டியில் உள்ள துர்நாற்றத்தைக் குறைக்கும், ஆனால் மிகக் குறைந்த அளவிலேயே பலனளிக்கும். குளிர்சாதனப் பெட்டியில் லேசான பூஞ்சை அல்லது ஈரப்பதம் கலந்த நாற்றம் இருந்தால், ஒரு ரோல் டாய்லெட் பேப்பரை உள்ளே வைப்பது, அந்த விரும்பத்தகாத வாசனைக்குக் காரணமான ஈரப்பதத்தின் ஒரு பகுதியை உறிஞ்சக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், சிந்திய உணவுப் பொருட்கள், அழுக்கு படிந்த தட்டுகள் அல்லது மறைவான இடங்களில் வளரும் பாக்டீரியாக்கள் போன்றவற்றாலேயே குளிர்சாதனப் பெட்டிக்குள் நீடித்த துர்நாற்றம் ஏற்படுகிறது. இவற்றைச் சரியான நேரத்தில் சுத்தம் செய்வதன் மூலமே துர்நாற்றத்தை முழுமையாக அகற்ற முடியும்.

டாய்லெட் பேப்பருக்கு என்ன நடக்கும்?

நீங்கள் நீண்ட காலம் குளிர்சாதனப் பெட்டியில் டாய்லெட் பேப்பரை வைத்தால், அது சுற்றுப்புறத்திலிருந்து படிப்படியாக ஈரப்பதத்தை உறிஞ்சிக்கொள்ளும். காலப்போக்கில், காகிதம் லேசாக ஈரமடையலாம் அல்லது அதன் இயல்பானத் தன்மையை இழக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த வழிமுறையை பின்பற்றும்போது, ​​பேப்பர் சுருளை சுத்தமாக வைத்திருப்பதும், சமைக்காத இறைச்சி, திறந்த பாத்திரங்கள் மற்றும் பிற மாசுபடக்கூடிய மூலங்களிலிருந்து விலக்கி வைப்பதும் முக்கியம். டாய்லெட் பேப்பர் தானாகவே துர்நாற்றத்தை உண்டாக்கும் பெரும்பாலான மூலக்கூறுகளை வேதியியல் ரீதியாக நடுநிலையாக்குவதில்லை, ஆனால் அதன் பலன் அதன் உறிஞ்சும் தன்மையிலிருந்து வருகிறது. பேப்பர் சுருள் குறிப்பிடத்தக்க அளவு ஈரமானால், அதை உடனடியாக மாற்ற வேண்டும்.

Story first published: Tuesday, September 1, 2026, 15:15 [IST]
Desktop Bottom Promotion