Latest Updates
-
1 கப் ஜவ்வரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. -
குரு அதிசார பெயர்ச்சி பலன் 2026 - பாதிப்பு யாருக்கு? பரிகாரம் என்ன? - ஜோதிடர் கணிப்பு! -
புரட்டாசி ஸ்பெஷல் செட்டிநாடு கல்யாண பிரிஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
ஓம நீர் Vs சோம்பு நீர் - இவற்றில் உண்மையில் செரிமானத்திற்கு சிறந்தது எது? -
அக்டோபர் 19-ல் சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், பணம் பெருகும்.. -
கல்யாண வீட்டு பூரி மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 11 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண் செலவுகள் தேடிவரப்போகுதாம் - ஜாக்கிரதை -
Navaratri 2026: இந்த நவராத்திரியில் ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா உருளைக்கிழங்கோட சேர்த்து இந்த மாதிரி குருமா பண்ணுங்க - ஹோட்டல் டேஸ்ட்ல இருக்கும் -
3 முட்டை இருந்தா இந்த கையேந்தி பவன் சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு காரசாரமா சூப்பரா இருக்கும்
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்..
Mercury Make Badra Rajyog On 07 September 2026: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன், நவகிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றக்கூடியவர். இப்படிப்பட்ட புதன் செப்டம்பர் மாதத்தில் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். அதுவும் செப்டம்பர் 07 ஆம் தேதி புதன் பெயர்ச்சி நிகழவுள்ளது.

புதன் தனது சொந்த ராசிக்குள் நுழைவதால் மிகவும் மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த பத்ரா ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதுவும் இந்த யோகத்தால் வியாபாரத்தில் பெரும் லாபம் கிடைக்கும், பேச்சில் செல்வாக்கு அதிகரிக்கும், பண வரவு அதிகரிக்கும். இப்போது புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகத்தால் தொழில் ரீதியாக நல்ல வளர்ச்சியைக் காணும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். எனவே இந்த புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகமானது இந்த ராசிக்காரர்களின் வசதிகளை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் புத்திசாலித்தனமும், செயல்திறனும் பாராட்டப்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீட்டில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் பெருகும்.
தனுசு
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்களுக்கு பெரிய அளவில் புதிய ஆர்டர்கள் கிடைக்கலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் பணியிடத்தில் கொடுக்கும் வேலையை சரியான நேரத்தில் முடித்துவிடுவீர்கள்.
சிம்மம்
புதன் பெயர்ச்சியால் உருவாகும் பத்ரா ராஜயோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்கு திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நீண்ட காலமாக கைக்கு வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். வங்கி இருப்பு அதிகரிக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் பேச்சு இனிமையாக இருக்கும். சொல்லப்போனால் இந்த பேச்சால் பல வேலைகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். மார்கெட்டிங் மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டிற்கு புதன் சென்று பத்ரா ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மகத்தான பலன்களைப் பெறுவார்கள். முக்கியமாக முடிவெடுக்கும் திறன் மேம்படும். புத்திசாலித்தனத்தால் பல வெற்றிகளை காண்பீர்கள். பணியிடத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு தங்கள் கூட்டாளியுடனான உறவு வலுவடையும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


