Latest Updates
-
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது! -
Navratri 2026: நவராத்திரியில் துர்கா தேவியை கனவில் கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா?
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
Venus Transit In Libra Make Malavya Rajyog 2026: வேத ஜோதிடத்தில் அழகு, காதல், செல்வம், செழிப்பு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அசுரர்களின் குருவாகவும் கருதப்படுகிறார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், ஒரு ராசியில் 23 முதல் 30 நாட்கள் வரை இருப்பார். சுக்கிரனின் நிலையில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் நிதி நிலையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சுக்கிரன் செப்டம்பர் 02 ஆம் தேதி தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைந்துள்ளார். இந்த ராசிக்கு சுக்கிரன் நுழைந்ததால் பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது செல்வம், செழிப்பு, கௌரவம், பொருள் வசதி, காதல் மற்றும் திருமண் வாழ்வில் மகிழ்ச்சி போன்றவற்றுடன் தொடர்புடையது.
இந்த யோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளனர். முக்கியமாக இந்த யோகமானது நவம்பர் 06 ஆம் தேதி வரை நீடித்திருக்கும் என்பதால், நவம்பர் வரை இந்த 5 ராசிக்கு பொற்காலமாக இருக்கப் போகிறது. இப்போது சுக்கிரனால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். பணியிடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலைப்பளுவை உணர்ந்தாலும், எதிர்காலத்தில் அது நல்ல பலனைத் தரும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மற்றும் தொடர்புகளால் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். தேவையற்ற செலவுகள் கட்டுப்படும். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த 2 மாதங்கள் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி ரீதியாக அடுத்த 2 மாத காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
மீனம்
மீன ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் நிலை வலுவடையும் வாய்ப்புள்ளது. இருந்தாலும் இக்காலத்தில் எந்த ஒரு தவறான செயல்களிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் பெரிய சிக்கலில் சிக்க நேரிடும். செய்யும் வேலையில் நேர்மையாக இருந்தால், நல்ல உயரத்தை அடைவீர்கள். மாணவர்கள் படிப்பில் முழு கவனத்தை செலுத்தினால் நல்ல பலனைப் பெறலாம். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் முடிந்து, மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்று மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமையும், வசீகரமும் அதிகரிக்கும். முக்கியமாக இக்காலத்தில் அலுவலகத்தில் உங்களின் கருத்துக்களை திறம்பட வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். நிதி நிலைமை வலுடையும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications



