Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா?
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும்
Shahi Pulao Recipe in Tamil: சூப்பரான மற்றும் ரிச்சான ஒரு மதிய உணவைத் தயாரிக்க ஆசைப்படுறீங்களா? அதேசமயம் வழக்கமான சாம்பார், ரசம், பொரியல் இல்லாம ஒரு வித்தியாசமான மதிய உணவை செய்ய விரும்புறீங்களா? அப்படினா இந்த முகலாயர் ஸ்டைல் ஷாகி புலாவை முயற்சி செய்து பாருங்கள். இந்த ஷாகி புலாவ் முகலாயர்களின் ஆட்சிக்காலத்தில் மன்னர்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் மட்டும் பரிமாறப்பட்ட ஒரு ராஜ உணவாகும்.

இந்த ஷாகி புலாவ் மிகவும் வித்தியாசமானது மற்றும் சுவையானது, அதேசமயம் செய்வதற்கு மிகவும் எளிதானதும் கூட. ஒருமுறை இந்த ஷாகி புலாவை செய்துவிட்டால் உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள், இதன் சுவை அவ்வளவு சூப்பராக இருக்கும்.
உங்களுக்கு முகல் ஸ்டைல் ஷாகி புலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஷாஹி புலாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் பாசுமதி அரிசி
- 2 ஸ்பூன் நெய்
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 10 பாதாம் பருப்பு
- 10 முந்திரி பருப்பு
- 10 உலர் திராட்சை
- 1 ஸ்பூன் சீரகம்
- 4 கிராம்பு
- 1 அன்னாசிப்பூ
- 2 ஏலக்காய்
- 1 பிரிஞ்சி இலை
- 1 இன்ச் பட்டை
- ½ கப் நறுக்கிய வெங்காயம்
- ¼ கப் கெட்டித் தயிர்
- 1 ஸ்பூன்கரம் மசாலா தூள்
- 2 ஸ்பூன் பொரித்த வெங்காயம்
- 1 ஸ்பூன் நறுக்கிய புதினா இலைகள்
- 1 ஸ்பூன் நறுக்கிய கொத்தமல்லி இலைகள்
- ¼ கப் பச்சை பட்டாணி
- ¼ கப் சிறு துண்டுகளாக நறுக்கிய கேரட்
- தேவையான அளவு உப்பு
- ஒரு சிட்டிகை பாலில் ஊறவைத்த குங்குமப்பூ
செய்முறை:
- பாசுமதி அரிசியைக் கழுவி, 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.
- ஒரு அகன்ற பாத்திரத்தில் மிதமான தீயில் எண்ணெய் மற்றும் நெய்யைச் சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் பாதாம் மற்றும் முந்திரிப் பருப்புபைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பின்னர் உலர் திராட்சைகளைச் சேர்த்து வினாடிகள் வறுக்கவும். வறுத்த பருப்பு வகைகளை ஒரு தட்டில் எடுத்து வைக்கவும்.
- பின்னர் அதே நெய்யில் சீரகம், கிராம்பு, நட்சத்திர சோம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றைச் சேர்த்து, சில நொடிகள் வதக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அடிக்கடி கிளறிக்கொண்டே பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின்னர் தயிர், கரம் மசாலாத் தூள், மொறுமொறுப்பாக வறுத்த வெங்காயம், புதினா, கொத்தமல்லி, பட்டாணி, கேரட் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- அதன்பின் ஊறவைத்த அரிசி, 2 கப் தண்ணீர், பாலில் ஊறவைத்த குங்குமப்பூ மற்றும் வறுத்த பருப்பு வகைகள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- பாத்திரத்தை மூடி, அரிசி வெந்து அதிலுள்ள நீர் முழுவதும் வற்றும் வரை 20-25 நிமிடங்களுக்குத் திறக்காமல் சமைக்கவும்.
- அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி, 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
- பின்னர் மூடியைத் திறந்து கரண்டியால் கிளறினால் அட்டகாசமான அரச உணவான ஷாகி புலாவ் ரெடி!



Click it and Unblock the Notifications