Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க..
Krishna Jayanthi Aval Ellu Sweet Recipe in Tamil: இந்த ஆண்டின் கிருஷ்ண ஜெயந்தி செப்டம்பர் 04 ஆம் தேதி வருகிறது. இந்த கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணகருக்கு பலவிதமான பலகாரங்களை செய்து படைத்து வழிபாடு செய்வார்கள். கிருஷ்ண ஜெயந்திக்கு உங்கள் வீட்டில் நிறைய பலகாரங்களை செய்து கிருஷ்ணருக்கு படைத்து வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளதா? அப்படியானால் அந்த பட்டியலில் கிருஷ்ணருக்கு பிடித்த அவலுடன், எள்ளு சேர்த்து ஒரு ஸ்வீட் செய்து படையுங்கள். இந்த அவல் எள்ளு ஸ்வீட் மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும். மேலும் இது 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு அவல் எள்ளு ஸ்வீட்டை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அவல் எள்ளு ஸ்வீட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நாட்டுச்சர்க்கரை - 3/4 கப்
* தண்ணீர் - 1 கப்
* நெய் - 1 1/4 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 3/4 கப்
* வெள்ளை எள்ளு - 1/4 கப்
* சிவப்பு அவல் - 1 கப்
* பொடித்த வேர்க்கடலை - 1/4 கப்
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 3/4 கப் நாட்டுச்சர்க்கரையை எடுத்துக்
கொண்டு, அத்துடன் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து,
நாட்டுச்சர்க்கரை கரைந்ததும், அதை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 1/4 டேபிள் ஸ்பூன்
நெய்யை ஊற்றி சூடானதும், துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் 1/4 கப் வெள்ளை எள்ளு விதைகளை சேர்த்து பொன்னிறமாக
ப்ரை செய்து, அவற்றை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து, அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்
ஊற்றி சூடானதும், 1 கப் சிவப்பு அவலை சேர்த்து மொறுமொறுவென்று வரும்
வரை வறுக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து கிளறி, மூடி வைத்து
வெல்ல நீர் ஓரளவு வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் வறுத்த தேங்காய் மற்றும் எள்ளு
விதைகளை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் பொடித்த வேர்க்கடலையை சேர்த்து நன்கு கிளறி, ஏலக்காய்
தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* இறுதியாக அதை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டினால், அவல் எள்ளு
ஸ்வீட் தயார்.



Click it and Unblock the Notifications