Latest Updates
-
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? பூமியின் எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
Mars Moon Make Mahalakshmi Rajyog On 05 September 2026: ஜோதிடத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றின் காரணியாவார். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது இந்த செவ்வாய் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் மனதின் காரணியாக கருதப்படும் சந்திரன் இந்த மிதுன ராசிக்குள் செப்டம்பர் 05 ஆம் தேதி நுழைகிறார். இதனால் மிதுன ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரனின் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த ராஜயோகமானது மிகவும் மங்களகரமான யோகமாகும். இந்த யோகம் செல்வம், தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
இப்படிப்பட்ட மங்களகரமான ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். குறிப்பாக 5 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறவுள்ளனர். இப்போது செவ்வாய் சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் சிறப்பான செயல்திறன் காரணமாக முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். தொழிலதிபர்களுக்கு எதிர்பாராத அளவில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சி நடப்பதற்கான வாய்ப்புள்ளது. முக்கியமாக இதுவரை சந்தித்து வந்த பண பிரச்சனைகள் குறையலாம்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. ஐடி துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமாக இருக்கும். வணிகர்களும் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இதுவரை வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் குறித்து இருந்த கவலை குறையும். மொத்தத்தில் தொழில் மற்றும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு வருமானத்தில் உயர்வு ஏற்படும். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிதி உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வலுவடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்துடன், லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. பெற்றோரிடமிருந்து நிதி உதவி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. சந்திரனின் ஆசியால் இதுவரை மனதில் இருந்த அழுத்தம் குறைவதோடு, நீண்ட மன கவலையும் தீரும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் சந்திர சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வழிகளில் இருந்து பணம் தேடி வரும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications


