Latest Updates
-
இந்த 3 கேள்விக்கு பதில் சொல்லுங்க.. உங்களோட உண்மையான குணத்தை சொல்றோம்.. -
கேது செவ்வாய் சேர்க்கை: டிசம்பர் முதல் இந்த 3 ராசிக்கு பண பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
நாவூறும்.. செம்மீன் சட்டிச்சோறு - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
25 வயதிலேயே சர்க்கரை நோயா? இளம் வயதினருக்கு ஏன் இவ்வளவு சீக்கிரமாக வருகிறது? டாக்டர் விளக்கம்! -
2027-ல் 3 முறை ராசியை மாற்றும் குரு பகவான்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மலாய் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 29, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கசப்பான அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவானின் வக்ர பெயர்ச்சியால் கோடி நன்மைகளை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முட்டை தேங்காய் குழம்பை ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல சூப்பரா இருக்கும் -
வார ராசிபலன் ( November 29-டிசம்பர் 05)- இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
உங்க முகத்தில் முகப்பரு தழும்புகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க..
Acne Scars Removal In Tamil: முகப்பரு என்பது முகத்தின் அழகைக் கெடுப்பதோடு மட்டுமல்லாமல், அவை மறைந்த பிறகும் சிலருக்கு பிடிவாதமான கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளை விட்டுச் சென்றுவிடும். முகப்பரு மறைந்த பிறகு உருவாகும் கரும்புள்ளிகள் காலப்போக்கில் தானாகவே மறைய வாய்ப்புள்ளது. பொதுவாக இவை மறைவதற்கு 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகலாம்.
கரும்புள்ளிகள் சருமத்தின் மேலடுக்கில் மட்டுமே இருந்தால், அவை 1 முதல் 3 மாதங்களுக்குள் மறையலாம். அதேசமயம், சருமத்தின் ஆழமான அடுக்குகள் வரை நிறமாற்றம் ஏற்பட்டிருந்தால், அவை முழுமையாக மறைய 9 முதல் 12 மாதங்கள் வரை கூட ஆகலாம்.

இந்த கரும்புள்ளிகளை மறைக்க பலரும் மேக்கப் பொருட்களைப் பயன்படுத்தினாலும், இயற்கையான முறையில் சருமத்தைப் பராமரிக்க விரும்புபவர்கள் வீட்டிலேயே ஃபேஸ் பேக்குகளை தயாரித்து பயன்படுத்த முயற்சி செய்கின்றனர். மஞ்சள், கற்றாழை, தேன், சந்தனம், தயிர் போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக்குகள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும், மென்மையாகப் பராமரிக்கவும் உதவக்கூடும். இப்போது முகப்பருவால் ஏற்பட்ட கரும்புள்ளிகளைப் போக்க உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. மஞ்சள் மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
2. கற்றாழை மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
3. ஓட்ஸ் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்துக் கொண்டு, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* அடுத்து வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
4. கடலை மாவு மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகத்தில் தடவி 30 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
5. பப்பாளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் நன்கு கனிந்த பப்பாளியை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து அதை முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
6. உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் உருளைக்கிழங்கை துருவி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
