Latest Updates
-
நாவூறும்.. செம்மீன் சட்டிச்சோறு - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
25 வயதிலேயே சர்க்கரை நோயா? இளம் வயதினருக்கு ஏன் இவ்வளவு சீக்கிரமாக வருகிறது? டாக்டர் விளக்கம்! -
2027-ல் 3 முறை ராசியை மாற்றும் குரு பகவான்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மலாய் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 29, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கசப்பான அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
குருபகவானின் வக்ர பெயர்ச்சியால் கோடி நன்மைகளை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முட்டை தேங்காய் குழம்பை ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல சூப்பரா இருக்கும் -
வார ராசிபலன் ( November 29-டிசம்பர் 05)- இந்த வாரம் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
இந்தியாவிலேயே அதிக குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
காரசாரமான ஹைதராபாத் சிக்கன் கறி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தரமான டேஸ்ட்ல இருக்கும்
கேது செவ்வாய் சேர்க்கை: டிசம்பர் முதல் இந்த 3 ராசிக்கு பண பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்..
Mars Ketu Conjunction 2026: ஜோதிடத்தின் படி, நிழல் கிரகமாக கருதப்படும் கேது ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பார். மேலும் இந்த கேதுவிற்கு சொந்த ராசி எதுவும் இல்லை மற்றும் கேது எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கக்கூடியவர். தற்போது கேது கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, கேது டிசம்பர் 05 ஆம் தேதி சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்குள் நுழைந்து பயணத்தை தொடங்கவுள்ளார்.

இந்த பெயர்ச்சியால், செவ்வாய் மற்றும் கேதுவின் நிலையால் த்விதுவாதச யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே ஏதாவது ஒரு வகையில் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கப் போகிறது. அதுவும் தொழில் மற்றும் நிதி ரீதியாக பல பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி, ஆரோக்கிய விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது கேது செவ்வாயால் உருவாகும் துவித்வாதச யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
த்வித்வாதச யோகத்தின் போது மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் கேதுவும், 5 ஆவது வீட்டில் செவ்வாயும் இருப்பார்கள். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் உணர்வுகளை கட்டுப்படுத்தி, அவசரப்பட்டு எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, பண விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதலீடுகளை செய்வதற்கு முன் நன்கு யோசிக்க வேண்டும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கக்கூடும். இதன் விளைவாக ஆரோக்கிய பிரச்சனைகளால் சிரமப்பட நேரிடும்.
சிம்மம்
த்வித்வாதச யோகத்தின் போது கேது 12 ஆவது வீட்டிலும், செவ்வாய் முதல் வீட்டிலும் இருப்பார்கள். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு கோபம் அதிகமாக வரும். இந்த கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். முக்கியமாக இக்காலத்தில் யாரையும் அதிகமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும். குடும்பத்தைப் பொறுத்தவரை, சொத்து தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
த்வித்வாதச யோகத்தின் போது மகர ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பழைய ஆரோக்கிய பிரச்சனைகள் மீண்டும் தலைத்தூக்கலாம். பண விஷயத்தைப் பொறுத்தவரை, பட்ஜெட் போட்டு செலவழிக்க வேண்டும். இல்லாவிட்டால் பணப் பிரச்சனையால் சிரதப்படக்கூடும். பணியிடத்தில் எந்த ஒரு வேலையையும் தள்ளிப் போடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அலுவலகத்தில் உங்கள் நிலை கடினமாகிவிடும். பயணங்களின் போது உடைமைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் வேலையை பெற கூடுதலாக முயற்சிக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
