இந்த 3 கேள்விக்கு பதில் சொல்லுங்க.. உங்களோட உண்மையான குணத்தை சொல்றோம்..

Tibetan Personality Test: நம்முடைய மனதில் பல எண்ணங்களும், உணர்வுகளும், ஆசைகளும் மறைந்திருக்கின்றன. அவற்றை நம்மால் எப்போதும் புரிந்துகொள்ள முடிவதில்லை. ஆனால், சில சுவாரஸ்யமான ஆளுமை சோதனைகள் மூலம் நம்முடைய எண்ணங்கள், வாழ்க்கையில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், மற்றவர்களை எப்படி பார்க்கிறோம் போன்ற விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

அந்த வகையில், மிகவும் சுவாரஸ்யமானதாகக் கூறப்படும் ஒரு பண்டைய திபெத்திய ஆளுமை சோதனை தான் இது. இந்த சோதனையில் மொத்தம் 3 கேள்விகள் மட்டுமே கேட்கப்படும். ஆனால், இந்தக் கேள்விகளுக்கான உங்களுடைய பதில்கள் உங்கள் ஆழ்மனதில் இருக்கும் எண்ணங்கள் மற்றும் வாழ்க்கையில் நீங்கள் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்பதைப் பற்றி சில சுவாரஸ்யமான விளக்கங்களைத் தருகின்றன.

Tibetan Personality Test 3 Questions Ancient Test Will Reveal Your True Nature

இந்த சோதனையைச் செய்யும்போது அதிகமாக யோசிக்க வேண்டாம். உங்கள் மனதில் முதலில் தோன்றும் பதில்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். சரியான பதில், தவறான பதில் என்று எதுவும் கிடையாது. ஒரு பேப்பர் மற்றும் பேனாவை எடுத்துக் கொண்டு இந்த சோதனையைத் தொடங்குங்கள்!

கேள்வி 1:

உங்கள் முன் 5 விலங்குகள் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அவை:

1. பசு
2. செம்மறி ஆடு
3. புலி
4. குதிரை
5. பன்றி

இந்த 5 விலங்குகளையும் உங்களுக்கு மிகவும் பிடித்த வரிசையில் இருந்து பிடிக்காத வரிசை வரை அடுக்க வேண்டும். உதாரணமாக, முதலில் உங்களுக்குப் பிடித்த விலங்கையும் கடைசியாகப் பிடிக்காத விலங்கையும் எழுதுங்கள்.

கேள்வி 2:

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு விஷயத்தையும் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை ஒரே ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டும். அதாவது, ஒவ்வொன்றுக்கும் ஒரே ஒரு பண்பை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

1. நாய் என்பது ______.
2. பூனை என்பது ______.
3. எலி என்பது ______.
4. காபி என்பது ______.
5. கடல் என்பது ______.

உதாரணமாக, நாய் என்பது விசுவாசமானது, பூனை என்பது அழகானது என்று உங்களுக்குத் தோன்றும் வார்த்தைகளை எழுதலாம். உங்கள் மனதில் முதலில் தோன்றும் வார்த்தையைத் தேர்வு செய்ய வேண்டும்.

கேள்வி 3:

உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான 5 நபர்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் குடும்ப உறுப்பினர்களாகவோ, நண்பர்களாகவோ அல்லது உங்களுக்குப் பிடித்தமானவர்களாகவோ இருக்கலாம். இப்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள 5 நிறங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு நிறத்தைத் தேர்வு செய்யுங்கள்.

- மஞ்சள்
- ஆரஞ்சு
- சிவப்பு
- வெள்ளை
- பச்சை

ஒவ்வொரு நபருக்கும் ஒரு நிறம் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். ஒரே நிறத்தை ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்குத் தேர்வு செய்யக்கூடாது. அதிகமாக யோசிக்காமல் மனதில் தோன்றும் நிறத்தைத் தேர்ந்தெடுங்கள்.

இப்போது உங்கள் பதில்களுக்கான அர்த்தங்களைத் தெரிந்துகொள்ளலாம்!

மூன்று கேள்விகளுக்கும் பதிலளித்துவிட்டீர்களா? அப்படியானால், இந்த திபெத்திய ஆளுமைசோதனையின்படி உங்களுடைய பதில்கள் எதைக் குறிக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.

கேள்வி 1-க்கான பதில்:

முதல் கேள்வியில் நீங்கள் 5 விலங்குகளையும் எந்த வரிசையில் அடுக்கினீர்களோ, அந்த வரிசை உங்கள் வாழ்க்கையில் எதற்கு முன்னுரிமை கொடுக்கிறீர்கள் என்பதை அடையாளப்படுத்துவதாக இந்த சோதனை கூறுகிறது.

- பசு : உங்கள் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு.
- புலி: உங்கள் சுயமரியாதை மற்றும் சுயமதிப்பு.
- செம்மறி ஆடு: காதல் மற்றும் அன்பு.
- குதிரை: குடும்பம்.
- பன்றி: பணம் மற்றும் செல்வம்.

கேள்வி 2-க்கான பதில்:

இரண்டாவது கேள்வியில் ஒவ்வொரு விஷயத்தையும் விவரிக்க நீங்கள் தேர்வு செய்த வார்த்தைகள், அவற்றைப் பற்றிய உங்களுடைய ஆழ்மனப் எண்ணங்களை வெளிப்படுத்துவதாக கூறுகிறது.
- நாய்: உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது.
- பூனை: உங்கள் காதல்/வாழ்க்கைத் துணையைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் எண்ணங்களைக் குறிக்கிறது.
- எலி: உங்களுடைய எதிரிகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது.
- காபி: உடலுறவு மற்றும் பாலியல் வாழ்க்கையைப் பற்றிய உங்கள் பார்வையைக் குறிக்கிறது.
- கடல்: உங்கள் வாழ்க்கையைப் பற்றிய உங்களின் ஒட்டுமொத்த கண்ணோட்டத்தைக் குறிக்கிறது.

கேள்வி 3-க்கான பதில்:

மூன்றாவது கேள்வியில் நீங்கள் தேர்வு செய்த நிறங்கள், உங்கள் வாழ்க்கையில் அந்தந்த நபர்களுக்கு இருக்கும் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

- மஞ்சள்: உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை/மாற்றத்தை ஏற்படுத்திய நபர்.
- ஆரஞ்சு: உங்களுடைய உண்மையான நண்பராக நீங்கள் கருதும் நபர்.
- சிவப்பு: நீங்கள் மனதாரவும் முழுமையாகவும் நேசிக்கும் நபர்.
- வெள்ளை: உங்கள் மனதிற்கு நெருக்கமான, உங்களுடன் ஆழமான புரிதலைக் கொண்ட நபர்.
- பச்சை: யாருடைய துணையும் இல்லாமல் உங்கள் வாழ்க்கையை நினைத்துப் பார்க்க முடியாத நபர்.

உதாரணமாக, உங்களுடைய வாழ்க்கையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய நபருக்கு மஞ்சள் நிறத்தைத் தேர்வு செய்திருந்தால், அந்த நபர் உங்களுடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கலாம் என்று இந்த சோதனை கூறுகிறது.

Story first published: Sunday, November 29, 2026, 17:45 [IST]
Desktop Bottom Promotion