Latest Updates
-
கேது-சந்திர சேர்க்கை: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
லன்ச் பாக்ஸ்-க்கு இந்த கோவைக்காய் சாதம் செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்க முகத்தில் முகப்பரு தழும்புகள் அதிகமா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
இந்த 3 கேள்விக்கு பதில் சொல்லுங்க.. உங்களோட உண்மையான குணத்தை சொல்றோம்.. -
கேது செவ்வாய் சேர்க்கை: டிசம்பர் முதல் இந்த 3 ராசிக்கு பண பிரச்சனை அதிகரிக்கப்போகுது.. உஷார்.. -
நாவூறும்.. செம்மீன் சட்டிச்சோறு - எப்படி செய்றதுன்னு பாத்து உடனே ட்ரை பண்ணுங்க.. -
25 வயதிலேயே சர்க்கரை நோயா? இளம் வயதினருக்கு ஏன் இவ்வளவு சீக்கிரமாக வருகிறது? டாக்டர் விளக்கம்! -
2027-ல் 3 முறை ராசியை மாற்றும் குரு பகவான்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
பூரி, சப்பாத்திக்கு ஏற்ற மலாய் சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
நவம்பர் 29, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கசப்பான அனுபவங்கள் நிறைந்த நாளாக இருக்குமாம்
நவம்பர் 30, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நல்ல செய்தி தேடிவரப்போகுதாம்
Today Rasi Palan: வேத ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு நாளும் நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நிலை ஆகியவற்றால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் இருக்கும்.

அதுவும் இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி திங்கள் கிழமையான இன்று உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்...
மேஷம்
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான நாளாக இருக்கும். இன்று நேர்மறையான சம்பவங்கள் வாழ்வில் நிறைந்திருக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், மேலும் தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்பட்டு, உறவில் நல்லிணக்கம் மீண்டும் வரும். செல்வாக்குமிக்க நபர்களுடனான தொடர்புகளிலிருந்து லாபகரமான ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீட்டிற்கு வரும் ஒரு நல்ல செய்தி அனைவரையும் மகிழ்ச்சியடைய வைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று சில இழப்புகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தினருடன் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் அதே வேளையில், வணிக ஒப்பந்தங்களில் கவனமாக முடிவுகளை எடுங்கள். வியாபார சிக்கல்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும், மேலும் மாணவர்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதைப் பற்றி பரிசீலிக்கலாம். விபத்துகளைத் தவிர்க்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று சில குழப்பங்களால் மனரீதியாக சிரமப்படுவார்கள். வேலையில் தேவையற்ற மோதல்களைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அது உங்கள் எதிர்காலத்தைப் பாதிக்கலாம். உங்கள் சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள், ஆனால் உங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். வியாபாரிகள் ஒரு புதிய கூட்டு வணிகத்திற்குள் நுழையத் திட்டமிடலாம். நீங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஒரு ஆன்மீகப் பயணத்திற்கும் செல்லலாம்.
கடகம்
இன்று வீட்டில் சூழ்நிலை நன்றாக இருக்காது. ஒரு குடும்ப உறுப்பினர் சொன்ன விஷயத்தைப் பற்றி நீங்கள் மோசமாக உணர்ந்தால், அந்த விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதற்குப் பதிலாக, அதைப் புறக்கணிக்க முயற்சியுங்கள். உங்களின் முழு கவனமும் அலுவலகத்தில் உங்கள் வேலையில் இருக்கும். இன்று உயர் அதிகாரிகளும் உங்களைப் பற்றி மிகவும் ஈர்க்கப்படுவார்கள். வணிகர்கள் நீண்ட பயணங்களைத் தவிர்க்கவும். பெரிய நிதி பரிவர்த்தனைகள் செய்வதற்கு இன்று ஏற்ற நாள் அல்ல. காதல் வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பம் ஏற்படலாம்.
சிம்மம்
இன்று நீங்கள் உடல்நலம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலையைப் பற்றி பேசுகையில், உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் பாதகமான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் அலட்சியம் பெரிய இழப்புகளை ஏற்படுத்தக்கூடும். பெரும் லாபங்களுக்காக தங்கள் வணிகத் திட்டங்களில் சில மாற்றங்களைச் செய்ய வர்த்தகர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். குடும்ப வாழ்க்கையில் சூழல் இனிமையாக இருக்கும்.
கன்னி
இன்று அலுவலகத்தின் சூழல் இன்று பரபரப்பாக இருக்கும். மேலும் நீங்கள் வேலை செய்வதில் மகிழ்ச்சியை உணருவீர்கள். இன்று உயர் அதிகாரிகளும் உங்கள் செயல்திறனில் திருப்தி அடைவார்கள். வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்வோர் நல்ல நிதி நன்மைகளை எதிர்பார்க்கலாம். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நலம் தொடர்பான எந்தவொரு பிரச்சனையையும் நீங்கள் சமாளிக்கலாம்.
துலாம்
இன்று வேலையைப் பற்றி அதிகம் கவலைப்படுவதைத் தவிர்க்கவும். உங்கள் தொடர்ந்து கடினமாக உழைத்தால், விரைவில் நல்ல வெற்றி பெறுவீர்கள். வணிகர்கள், ஒரு புதிய வணிகத்தில் தங்கள் அதிர்ஷ்டத்தை பெற முயற்சித்தால், உங்கள் நிதி நிலைமையை மனதில் வைத்து மட்டுமே முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் கடன் சுமை அதிகரிக்கலாம். இன்று நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவழிக்கலாம்.
விருச்சிகம்
இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உங்களுக்கென போதுமான நேரத்தைப் பெறுவீர்கள். வணிகர்கள் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அதேசமயம் உத்தியோகஸ்தர்கள ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டுமே செய்வது நல்லது. இல்லையெனில், உங்கள் சிறிய தவறுகள் உங்கள் வேலையை பாதிக்கக்கூடும். அது உங்கள் முன்னேற்றத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். பண விஷயத்தில் இன்று நன்றாக இருக்கும்.
தனுசு
இன்று உங்களுக்கு மிகவும் கடினமான நாளாக இருக்கும். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி அல்லது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, நீங்கள் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் பொறுமையாக இருந்து, அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு நிதி இழப்பு ஏற்படலாம். இருப்பினும், நீங்கள் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் உங்கள் இழப்பை ஈடுசெய்ய விரைவில் உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
இன்று முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது அவசரப்பட வேண்டாம். உங்கள் அன்புக்குரியவர்களுடன் கலந்தாலோசித்த பின்னரே எந்த முடிவையும் எடுங்கள். நிதி நிலைமை மோசமடையலாம். தொழிலதிபர்கள் புதிய முதலீடுகள் செய்ய இன்று சாதகமான நாள் இல்லை. உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதங்கள் வரலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். இன்று மருத்துவ செலவுகள் அதிகரிக்கலாம்.
கும்பம்
இன்று வேலை தொடர்பான முடிவுகளை இன்று நீங்கள் நம்பிக்கையுடன் எடுக்க வேண்டும். இன்று நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் அது வெற்றி அடையும். வியாபாரிகளின் ரகசிய எதிரிகள் இன்று உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். உத்தியோகஸ்தர்கள் தேவையில்லாமல் பேசி நேரத்தை வீணடிக்காமல், உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நாளின் இரண்டாம் பகுதியில் நண்பர்களுடன் வெளியே செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்குப் போதுமான நேரம் ஒதுக்க முயற்சி செய்யுங்கள்.
மீனம்
இன்று உங்கள் அன்புக்குரியவர்களின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுங்கள். புதிய மற்றும் சிறப்பான ஒன்றைச் செய்ய இன்று சாதகமான நாள். வணிகர்களின் வணிகத் திட்டங்களில் ஒன்று பாதியில் தடைப்படலாம். உங்களுக்கு நிதி இழப்பும் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகள் செய்வதைத் தவிர்க்கவும். குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். காதல் வாழ்க்கையில் நீங்கள் ஏதேனும் தவறு செய்திருந்தால், அதைத் திருத்தி புதிதாகத் தொடங்க முயற்சிக்கவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
