கேது-சந்திர சேர்க்கை: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்..

Ketu Moon Conjunction In Leo 2026: ஜோதிடத்தில் மனதின் காரணியாக கருதப்படுபவர் சந்திரன். இந்த சந்திரன் 2 1/2 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். கடக ராசியின் அதிபதியான சந்திரன் குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவதால், அவ்வப்போது மற்ற கிரகங்களுடன் சேர்ந்து பயணிப்பார். அப்போது சில சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகி மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

Ketu Moon Conjunction In Leo 2026 These Zodiac Signs Should Be Careful

அந்த வகையில் சந்திரன் நவம்பர் 30 ஆம் தேதி சித்த ராசிக்குள் நுழையவுள்ளார். அப்போது அந்த சிம்ம ராசியில் ஏற்கனவே உள்ள கேதுவுடன் சேர்ந்து பயணிக்கவுள்ளார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் ஒருவரது மனம், உணர்ச்சிகள் மற்றும் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும்.

என்ன தான் இந்த கிரக சேர்க்கையின் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வேலை, குடும்பம், பண விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இப்போது கேது சந்திர சேர்க்கையால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டில் கேது சந்திர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். உடன் வேலை செய்வோர் அல்லது உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. சிறு விஷயங்களுக்காகவும் கோபப்படுவதைத் தவிர்க்க வேண்டும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு வாக்குவாதங்களிலும் ஈடுபடாமல் பொறுமையாக இருப்பது மிகவும் நல்லது.

தனுசு

தனுசு ராசியின் 9 ஆவது வீட்டில் கேது சந்திர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வேலை ரீதியாக கடினமாக இருக்கலாம். பணியிடத்தில் வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் அதிகரிக்கலாம். பணிபுரிபவர்கள் தங்கள் பொறுப்புகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எந்த ஒரு முக்கியமான ஒப்பந்ங்களிலும் கையெழுத்திமும் முன் கவனமாக படித்து தெரிந்து கொண்டு, பின் முடிவெடுக்க வேண்டும்.

கும்பம்

கும்ப ராசியின் 7 ஆவது வீட்டில் கேது சந்திர சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலையில் பராமரிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். வேலை பரபரப்பால் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவழிக்க முடியாமல் போகலாம். இப்படிப்படட நேரத்தை எந்த ஒரு முக்கியமான முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். பண விஷயங்களிலும் குடும்ப ரீதியாகவும் நன்கு சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion