மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..

Posted By:

Thakkali Rasam Recipe In Tamil: மதிய வேளையில் தினமும் ஒரே மாதிரியாக சமைத்து போரடித்துவிட்டதா? சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழம்பு, ரசம் என்று தனித்தனியாக சமைத்து அலுத்துவிட்டதா? அப்படியானால் தக்காளியைக் கொண்டு ரசம் வையுங்கள். அதுவும் இந்த ரசத்தை துவரம் பருப்பு சேர்த்து செய்யும் போது, சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். சொல்லப்போனால் இப்படி ஒருமுறை ரசம் வைத்தால், பின் அடிக்கடி இப்படி தான் ரசம் வைப்பீர்கள்.

Thakkali Rasam How To Make Tomato Rasam Recipe

உங்களுக்கு இந்த தக்காளி ரசத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

வேக வைப்பதற்கு...

* தக்காளி - 4
* துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு

வறுத்து பொடி செய்வதற்கு..

* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 2 சிட்டிகை
* கறிவேப்பிலை - 1 கொத்து
* வரமிளகாய் - 5

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல் (தட்டி வைத்துள்ளது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
* வேக வைத்த பருப்பு
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* ரசப் பவுடர் - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் குக்கரை எடுத்துக் கொண்டு, அதில் 4 தக்காளியை இரண்டு துண்டுகளாக வெட்டி போட்டு, அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பை நீரில் கழுவி சேர்க்க வேண்டும்.
* பிறகு அதில் தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, தக்காளியின் தோலை அகற்றிவிட்டு, மத்து கொண்டு மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, தட்டி வைத்துள்ள பூண்டு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பு தக்காளியை சேர்த்து, அதன் பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கலந்து 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் 1 1/2 டீஸ்பூன் ரசப் பவுடரை சேர்த்து கிளறி, 1 கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், தக்காளி ரசம் தயார்.

[ of 5 - Users]
Story first published: Friday, September 4, 2026, 13:31 [IST]
Desktop Bottom Promotion