Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும்
Iyengar Style Naarthangai Sadam Recipe in Tamil: ஒவ்வொரு நாளும் என்ன சமைப்பது என்பதுதான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சினை. தினமும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரடித்துவிட்டதா? அவ்வப்போது சற்று வித்தியாசமான ரெசிபிக்களை வீட்டில் செய்து சுவைக்க விரும்புவீர்களா? அப்படியென்றால் ஐயங்கார் ஸ்டைலில் நார்த்தங்காய் சாதத்தை முயற்சி செய்து பாருங்கள்.

பொதுவாக ஐயங்கார் ஸ்டைல் ரெசிபி என்றாலே அதற்கு தனித்துவமான ருசியும், மணமும் இருக்கும் என்று கூறுவார்கள். இந்த நார்த்தங்காய் சாதமும் அதற்கு விதிவிலக்கல்ல. சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போரடித்தவர்களுக்கு இந்த அட்டகாசமான நார்த்தங்காய் சாதம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். இந்த நார்த்தங்காய் சாதம் செய்வதற்கு எளிதானது, இதன் சுவையும் மிகவும் தனித்துவமானதாக இருக்கும்.
உங்களுக்கு ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாத ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் சாதம்
- 1 பழுத்த நார்த்தங்காய்
- 1/2 கப் துருவிய தேங்காய்
- தேவையான அளவு உப்பு
மசாலா கலவைக்கு:
- 1 ஸ்பூன் நெய்
- 1/4 கப் உளுத்தம் பருப்பு
- 5 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் மிளகு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
தாளிக்க:
- 3 டேபிள் கடலை எண்ணெய்
- 15 உடைத்த முந்திரிப் பருப்பு
- 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
- ஒரு சிட்டிகை பெருங்காயம்
- 2 கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் சாதத்தை தயார் செய்து ஒரு தட்டில் போட்து ஆற வைக்கவும். சாதம் குலையாமல் இருக்க வேண்டியது அவசியம்.
- ஒரு வாணலியை மிதமான தீயில் சூடாக்கவும். அதில் சில துளிகள் நெய் சேர்த்து, அதனுடன் மிளகு மற்றும் வர மிளகாயைச் சேர்க்கவும்.
- மிளகு பொரியத் தொடங்கும் வரை வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைக்கவும். அதே வாணலியில் உளுத்தம் பருப்பைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு பெருங்காயத்தைச் சேர்க்கவும்.
- வறுத்த பொருட்கள் ஆறிய பிறகு, அவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் கடலை எண்ணெயை மிதமான தீயில் சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், உடைத்த முந்திரித் துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வறுத்த முந்திரியை தனியாக எடுத்து வைக்கவும். அதே எண்ணெயில் உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும்.
- உளுத்தம் பருப்பு பொன்னிறமாகவும், கறிவேப்பிலை மொறுமொறுப்பாகவும் மாறியதும், அடுப்பை அணைத்துவிட்டு பெருங்காயத் தூளைச் சேர்க்கவும்.
- வாணலியில் வேகவைத்த சாதத்தைச் சேர்க்கவும். சுவைக்கேற்ப உப்பு தூவவும். அரைத்து வைத்துள்ள மசாலா கலவை மற்றும் காய்ந்த தேங்காய் துருவல் ஆகியவற்றில் 3 ஸ்பூன் சேர்க்கவும்.
- இப்போது நார்த்தங்காய் சாற்றை சாதத்தின் மீது சீராகப் பிழியவும். வறுத்து வைத்துள்ள முந்திரியைச் சேர்க்கவும். அனைத்தையும் நன்றாகக் கலக்கவும்.
மசாலாச் சுவை சாதத்தில் நன்கு இறங்குவதற்காகச் சிறிது நேரம் அப்படியே வைத்திருந்து அதன்பின் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications